» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கல்லடிமாமூடுயில் மினி விளையாட்டு மைதானம் : அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு!

செவ்வாய் 9, ஜூலை 2024 12:00:11 PM (IST)கல்லடிமாமூடு பகுதியில் ரூ.3 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் மினி விளையாட்டு மைதானத்தினை அமைச்சர் த.மனோ தங்கராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் வட்டம், குலசேகரம் பேரூராட்சிக்குட்பட்ட கல்லடிமாமூடு பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள மினி விளையாட்டு மைதானம் அமைந்திடும் இடத்தில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் , மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்

பின்னர் அமைச்சர் தெரிவிக்கையில்:- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலாக தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டபேரவை கூட்டத்தின்போது தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் புதிய மினி விளையாட்டு மைதானம் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சட்டபேரவை விதி 110-கீழ் அறிவித்தார்கள்.

அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட கன்னியாகுமரி, குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய ஐந்து சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மினி விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முதற்கட்டமாக பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, திருவட்டார் வட்டம், கல்லடிமாமூடு பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 4.83 ஏக்கர் நிலத்தினை தமிழ்நாடு அரசின் அனுமதி பெற்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணைத்துக்கு ஒப்படைக்கப்பட்டதைத்தொடர்ந்து சட்டமன்ற பேரவை விதி 110-கீழ் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.50 இலட்சமும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அரசு நிதியின் கீழ் ரூ.2.50 கோடி என மொத்தம் ரூ.3 கோடி மதிப்பில் புதிய மினி விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான பணியினை தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக கடந்த 19.10.2023 அன்று துவக்கி வைத்தார்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏராளமான விளையாட்டு வீரர்கள் உள்ளார்கள். ஆனால் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தை தவிர வேறு விளையாட்டு அரங்கம் இல்லை. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முயற்சியில் கல்லாடிமாமூடு பகுதியில் விளையாட்டு மைதானம் அமைந்திடும் இடத்தில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பணிகளை விரைந்து தொடங்கி விளையாட்டு வீரர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் குளச்சல் பகுதியில் மினி விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்றார். 

ஆய்வின்போது மாவட்ட விளையாட்டு நல அலுவலர் ராஜேஷ், திருவட்டார் வட்டாட்சியர் புரந்தரதாஸ், அரசு வழக்கறிஞர் ஜாண்சன், குலசேகரம் பேரூராட்சி செயல் அலுவலர் எட்வின் ஜோஸ், குலசேகரம் பேரூராட்சி தலைவர் ஜெயந்தி ஜேம்ஸ், உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory