» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சுகாதார துறையில் பணியிடங்கள்: ஜூலை 5க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

வெள்ளி 21, ஜூன் 2024 4:19:28 PM (IST)

கன்னியாகுமரி மாவட்ட சுகாதார துறையில் தகவல் மேலாளர் மற்றும் ஆய்வக உதவியாளர் தற்காலிக பணியிடங்களுக்கு  ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "கன்னியாகுமரி மாவட்ட சுகாதார அலுவலகத்திற்குட்பட்ட IDSP திட்டத்தின் கீழ் உள்ள ஒரு தகவல் மேலாளர் மற்றும் ஒரு ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக திறக்கப்பட உள்ளது.

தகவல் மேலாளர் பணியிடத்திற்கு கல்வித்தகுதி கணினி அறிவியல் முதுநிலை பட்டம் அல்லது பொறியியல் பட்டப்படிப்பு  (IT/ Electronics) எனவும், மாத தொகுப்பூதியமாக ரூ.20000/- ஆகவும், ஆய்வக உதவியாளர் பணியிடத்திற்கு கல்வித்தகுதியாக 8-ஆம் வகுப்பு எனவும், மாத தொகுப்பூதியமாக ரூ.8500/- ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வொப்பந்த பணியிடம் தொடர்பான தகுதிகள், வயது வரம்பு, இனசுழற்சி மற்றும் விண்ணப்ப படிவங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் www.kanniyakumari.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

விண்ணப்பங்களை இவ்வலுவலகத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை  05.07.2024 மாலை 5 மணிக்குள்ள மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலகம், கிருஷ்ணன்கோவில், நாகர்கோவில்-1 என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory