» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சீர்மரபினர் நலவாரியத்தில் நலதிட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்

வியாழன் 20, ஜூன் 2024 4:06:22 PM (IST)

தமிழ்நாடு சீர்மரபினர் நலவாரியத்தில் உறுப்பினராக சேர்ந்து நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம் என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்களை தலைவராகவும், இராசா.அருண்மொழி அவர்களை துணைத் தலைவராக கொண்டு தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியம் சீரிய முறையில் செயல்பட்டு வருகிறது. 

இவ்வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கிழ் உதவித்தொகை, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை, ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, மூக்குக் கண்ணாடி செலவுத்தொகை ஈடு செய்தல், முதியோர் ஓய்வூதியம் ஆகிய நலத்திட்ட உதவிகள் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

மேற்படி நலத்திட்ட உதவிகள் பெற 1) சீர்மரபினர் இனத்தைச்சார்ந்தவர்கள் 2) 18 வயது முதல் 60 வயதுக்கு மிகாமல் உள்ளவர்கள் 3) அமைப்பு சாரா நிறுவனங்களில் பணிபுரியாத குடும்பத்தில் ஒருவர் (அமைப்பு சாரா தொழில், நிலமற்ற விவசாய கூலி, உடலுழைப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள) இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும், ஏற்கனவே உறுப்பினராக பதிவு செய்தோர்கள் தங்கள் உறுப்பினர் பதிவினை விரைவில் புதுப்பித்துக்கொள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory