» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குடும்பத் தகராறில் தீக்குளித்த பெண் மரணம் : தூத்துக்குடி அருகே சோகம்!
ஞாயிறு 19, மே 2024 11:28:10 AM (IST)
தூத்துக்குடி அருகே குடும்பத் தகராறில் தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள தளவாய்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் மனைவி சோலையம்மாள் (43). இந்த தம்பதிகளின் மகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தந்தையின் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்து கொண்டாராம். ஆனால் சோலையம்மாள் கணவன் பேச்சையும் மீறி மகளுடன் பேசியதாக கூறப்படுகிறது.
இதை பார்த்த மாரியப்பன், சோலையம்மாளை சத்தம் போட்டு உள்ளார். இதில் மனவேதனை அடைந்த சோலையம்மாள் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். தீக்காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் சப் இன்ஸ்பெக்டர் குருசாமி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஓடுகாலிDec 25, 1716 - 03:30:00 AM | Posted IP 162.1*****