» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பரமன்குறிச்சி பாலம் பணியை கைவிட வேண்டும் : இந்து முன்னணி கோரிக்கை!

ஞாயிறு 19, மே 2024 11:00:04 AM (IST)

பரமன்குறிச்சி -வெள்ளாளன்விளை சாலையில் பாலம் அமைக்கும் பணியை கைவிட வேண்டும் என்று இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் அனுப்பிய கோரிக்கை மனுவில் "உடன்குடி யூனியன் பரமன்குறிச்சி -வெள்ளாளன்விளை சாலையில் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த மழையில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து தடைப்பட்டது. 

பல்வேறு கட்ட போராட்டத்திற்கு பிறகு சுமார் 2 மாதம் கடந்து போக்குவரத்திற்காக சாலை சரிசெய்யப்பட்டது. தற்போது அந்த சாலையில் பாலம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாலம் கட்டினால் மேற்கு பகுதியில் வரும் மழை தண்ணீர் எங்கே போகும்? கீழ்புறம் உள்ள தேரிநிலம் அரசுக்கு சொந்தமானதா? அந்த தேரியை கடந்து தண்ணீர் எங்கே செல்லும்? என்று முழு ஆய்வு செய்ய வேண்டும். அதுவரை பாலம் கட்டும் முயற்சியை கைவிட வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டம் தொடர் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேரத்தில் பத்து ஆண்டு பின்னோக்கி சென்று விட்டது என்று நீங்கள் தான் சொன்னீர்கள். எத்தனையோ பகுதி இன்னும் இதைவிட மோசமாக உள்ளது. எனவே பரமன்குறிச்சி -வெள்ளாளன்விளை சாலையில் பாலம் அமைக்கும் பணிகளை விட்டு விட்டு, மாவட்ட நிர்வாகம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை துரிதப்படுத்தி மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory