» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
விசாக திருவிழா: நெல்லை-திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்!
ஞாயிறு 19, மே 2024 9:21:25 AM (IST)

வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு, வருகிற 22-ஆம் தேதி நெல்லை-திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா வருகிற 22-ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள். இதனை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக அன்றைய தினம் நெல்லை-திருச்செந்தூர் இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
நெல்லையில் இருந்து காலை 6.40 மணிக்கு (வண்டி எண்:06857) சிறப்பு ரயில் புறப்பட்டு காலை 8.15 மணிக்கு திருச்செந்தூரை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் திருச்செந்தூரில் இருந்து (வண்டி எண்:06858) சிறப்பு ரயில் காலை 9.15 மணிக்கு புறப்பட்டு நெல்லையை காலை 10.50 மணிக்கு வந்தடைகிறது.
மேலும் நெல்லையில் இருந்து (வண்டி எண்:06859) சிறப்பு ரயில் மதியம் 11.25 மணிக்கு புறப்பட்டு 1 மணிக்கு திருச்செந்தூரை சென்றடைகிறது. திருச்செந்தூரில் இருந்து (வண்டி எண்: 06860) சிறப்பு ரயில் மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 3 மணிக்கு நெல்லையை வந்தடைகிறது.
இந்த சிறப்பு ரயில்கள் பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், தாதன்குளம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, நாசரேத், கச்சனாவிளை, குரும்பூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இதில் 5 பொதுபெட்டிகள் மற்றும் ஒரு லக்கேஜ் வசதியுடன் கூடிய பெட்டி இணைக்கப்பட்டு இருக்கும். இந்த தகவலை தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.
இதுதவிர நெல்லை சந்திப்பில் இருந்து திருச்செந்தூருக்கு அதிகாலை 4.30 மணி (செந்தூர் எக்ஸ்பிரஸ்), காலை 7.25 மணி, 10.10 மணி, 11.40 மணி, மதியம் 1.30 மணி (பாலக்காடு எக்ஸ்பிரஸ்), மாலை 4.30 மணி, 6.50 மணிக்கு தினசரி ரயில்கள் உள்ளன. அதேபோன்று திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு காலை 7.20 மணி, 8.15 மணி, மதியம் 12.20 மணி (பாலக்காடு எக்ஸ்பிரஸ்), 2.30 மணி, மாலை 4.25 மணி, 6.15 மணி, இரவு 8.25 மணிக்கு (செந்தூர் எக்ஸ்பிரஸ்) தினசரி ரயில்கள் இயக்கப்படுகின்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வேளாங்கண்ணி சிறப்பு ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும்: பயணிகள் சங்கம் கோரிக்கை!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:36:37 PM (IST)

கன்னியாகுமரியில் மாபெரும் காத்தாடி திருவிழா: சுற்றுலாத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்!
சனி 29, ஆகஸ்ட் 2026 11:03:05 AM (IST)

பேரூராட்சித் தலைவர் மற்றும் அவரது கணவர் கட்சியிலிருந்து நீக்கம் - சிபிஎம் அதிரடி!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 3:51:42 PM (IST)

குமரி மாவட்டத்தில் ரூ.1041 கோடியில் நெடுஞ்சாலை பணிகள் : ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு!
புதன் 26, ஆகஸ்ட் 2026 12:04:00 PM (IST)

தோவாளையிலிருந்து கேரளாவுக்கு மலர்கள் கொண்டு செல்ல சிறப்பு 'மேமு' ரயில்: பயணிகள் சங்கம் கோரிக்கை!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 5:52:59 PM (IST)

தாயைக் கொன்று ஜாமீனில் வந்த வாலிபர் பக்கத்து வீட்டுப் பெண்ணைக் குத்திக் கொன்ற கொடூரம்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 8:48:42 AM (IST)



Murugan adimaiமே 20, 2024 - 09:11:53 AM | Posted IP 162.1*****