» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தேர்தல் கட்டுப்பாட்டு அறையினை பொதுப் பார்வையாளர் ஷேஷகிரி பாபு நேரில் ஆய்வு!

வியாழன் 28, மார்ச் 2024 5:01:59 PM (IST)



கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையினை தேர்தல் பொதுப்பார்வையாளர் ஷேஷகிரி பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொதுப்பார்வையாளர் ஷேஷகிரி பாபு, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையினை இன்று (28.03.2024) நேரில் பார்வையிட்டு தெரிவிக்கையில் "இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலை ஜனநாயக முறையில் 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்ஒருபகுதியாக இன்று தேர்தல் கட்டுப்பாட்டு அறை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக தேர்தல் குறித்த சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மையம் குறித்து அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது. மேலும் C-VIGIL மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள், ஊடக கண்காணிப்பு மற்றும் சான்றிதழ் குழுவின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறியப்பட்டது. இவ்வாறு தேர்தல் பொதுப்பார்வையாளர் ஷேஷகிரி பாபு, தெரிவித்தார்கள்.

நடைபெற்ற ஆய்வின்போது, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், உதவி ஆட்சியர் பயிற்சி ரஜத் பீட்டன், இ.ஆ.ப, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் கு.சுகிதா (பொது), செந்தூர் ராஜன் (தேர்தல்), கண்காணிப்பு அலுவலர்கள் வாணி, ஷீலா ஜாண், ஜான் ஜெகத் பிரைட், உதவி தேர்தல் அலுவலர்கள் கனகராஜ், சுப்புலட்சு, முதன்மை பயிற்சியாளர் மற்றும் தனி வட்டாட்சியர் சுப்பிரமணியன், தேர்தல் வட்டாட்சியர் வினோத், தேர்தல் துணை வட்டாட்சியர் மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory