» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் 18 -பேர் மனுதாக்கல்.

வியாழன் 28, மார்ச் 2024 10:06:21 AM (IST)

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் மொத்தம் 18பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். 

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜயதாரணி, இவர் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, தேர்தல் ஆணையம் விளவங்கோடு தொகுதி காலியானதாக அறிவித்தது.

இதை அடுத்து பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கல் நேற்று நிறைவு பெற்றது. மொத்தம் 18பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். 

இது குறித்து விவரம் வருமாறு: 

1. மோகன் குமார் (சுயேட்சை), 

2. ராணி (அதிமுக), 

3. விஜயகுமார் (சுயேட்சை), 

4. ஷாஜின் (சுயேட்சை), 

5. ஓம் பிரகாஷ் (49) இந்து மகா சபா, 

6. ரசல்சி(38) (சுயேட்சை), 

7. ஜெமினி (39 ) நாம் தமிழர்) 

8. மரிய ஸ்டெல்லா (நாம் தமிழர் மாற்று) 

9. கண்ணன் (37 ) (சி பி எம் எல் ரெட் ஸ்டார்) 

10. தாரகை காட்பட் (48) காங்கிரஸ்

11. ஜஸ்டின் (43)(சுயேட்சை) 

12. நந்தினி(42) பாஜக 

13. சுகுமாரன் (54) பாஜக மாற்று 

14. எட்வின் ராஜகுமார்(அதிமுக) மாற்று 

15.சுனில் (தமிழ்நாடு இளைஞர்கள் ) 

16. ராஜேஷ்(சுயேட்சை) 

17. பழவார் தங்கப்பன் (75) தமிழ்நாடு மகாத்மா காந்தி மக்கள் கட்சி, 

18. அரோமன் ஜார்ஜ் (காங்கிரஸ் மாற்று) 

ஆகியோர் மனதாக்கல் செய்தனர். பாஜக மற்றும் திமுகவினர் அதிக அளவில் தொண்டர்களுடன் வந்து ஆட்டம் பாட்டம் கோஷங்களுடன் மனுதாக்கல் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory