» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பேரிடர் கால தொடர்புக்காக வாக்கி டாக்கி கருவிகள் : ஆட்சியர் ஸ்ரீதர் வழங்கினார்!

திங்கள் 22, ஜனவரி 2024 5:23:49 PM (IST)



பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலரை தொடர்பு கொண்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வாக்கி டாக்கி கருவிகளை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர்,   அலுவலர்களுக்கு வழங்கினார்

கன்னியாகுமரி மாவட்டம் ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக் காலங்களில் புயல் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களினால் அதிகளவு பாதிப்படைகின்றது. பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் தெரிவித்திடவும், சம்மந்தப்பட்ட அலுவலரை உடனடியாக தொடர்பு கொண்டு கள நிலவரத்தினை துரிதமாக தெரிந்து கொள்ளவும் மக்கள் நலம் சார்ந்த பணிகளில் அலுவலருக்கு இடையேயான தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் பொருட்டு நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட Digital Radio Communication System walkie talkie கருவிகளை பயன்படுத்துவது இன்றியமையாதது ஆகும்.

மேலும் தற்போது வடகிழக்கு பருவமழை 2023 -ன் போது 17.12.2023 மற்றும் 18.12.2023 அதிக கனமழை பெய்து மாவட்டத்தில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. புயல் ஏற்படும் போது அதிக காற்றின் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு மின்சாரம் இல்லாத நிலை ஏற்படும் பொழுதும், கைப்பேசியில் தொடர்புகொள்ள இயலாத நிலையிலும், (Not Reachable) Digital Radio Communication System walkie talkie புதிய தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தி தகவல்களை உடனுக்குடன் பரிமாறிக் கொள்வதற்காக மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), சார் ஆட்சியர், பத்மனாபபுரம், வருவாய் கோட்டாட்சியர், நாகர்கோவில், பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர், வட்டாட்சியர்கள், அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு, திருவட்டார், கிள்ளியூர் ஆகிய 6 வட்டங்களில் உள்ள வட்டாட்சியர்களையும் சேர்த்து மொத்தம் 12 அலுவலர்களுக்கு மேற்படி Digital Radio Communication System walkie talkie கருவிகள் வழங்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர்  தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory