» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரியில் காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்.

சனி 13, ஜனவரி 2024 12:45:45 PM (IST)

தேர்தல் நடவடிக்கை எதிரொலியாக தமிழகம் முழுவதும் காவல் துறையினர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதில் காவல் ஆய்வாளர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்றப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து சிலர் குமரி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டு உள்ளனர்.  

தென் மண்டல ஐஜியாக அஸ்ரா கார்க் இருந்தபோது, குமரி மாவட்டத்திலேயே காவல் உதவி ஆய்வாளராகவும் காவல் ஆய்வாளராகவும் சுமார் 15 வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்த பெண் காவல் ஆய்வாளர் அந்தோணியம்மாள்  பல்வேறு புகார்களின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட குற்ற பிரிவுக்கு மாற்றப்பட்டார். சமீபத்தில் தென்மண்டல ஐஜியாக நரேந்திரன் நாயர் அவர்கள் பொறுப்பேற்றார். அதன் பின்னர் தற்போது தேர்தல் காலத்தை கருத்தில் கொண்டு காவல் ஆய்வாளர்கள் மாற்றப்பட்டு உள்ளனர்.  

இதில் ஏற்கனவே தண்டனை பணியிடமாக குறிப்பாக பல்வேறு புகார்களின் அடிப்படையில் குமரி மாவட்டம், கொல்லங்கோடு காவல் நிலையத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்ட காவல் ஆய்வாளர் அந்தோணியம்மாள் மீண்டும் குமரி மாவட்டத்திற்கு, குறிப்பாக நேசமணி நகர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இவருடைய கணவரும் குமரி மாவட்ட காவல் துறையிலேயே அதுவும் குறிப்பாக குளச்சல் உட்கோட்டத்திலேயே இருவரும் தம்பதிகளாக பணிபுரிந்து வந்தது குறிப்பிடத்தக்கது. 

தேர்தல் கால பணியிட மாற்றத்தில் உயர் அதிகாரிகள் தண்டனை பணியிடமாக குமரி மாவட்டத்தில் இருந்து மாற்றப்பட்டவர்களை மீண்டும் குமரி மாவட்டத்தில் பணியாற்ற அனுமதிப்பது குமரி மாவட்டத்தில் மீண்டும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் உருவாகவும் காவல்துறைக்கு அவ பெயர்கள் இவர்கள் மூலம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளதால் தமிழக காவல்துறை, பணியிட மாற்றங்களின் போது மீண்டும் குமரி மாவட்டத்தில் பணியாற்ற அனுமதிக்காமல் வேறு மாவட்டத்திற்கு மாற்ற வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory