» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

எஸ்பிஐ இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு அபராதம்: நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பு

வெள்ளி 22, செப்டம்பர் 2023 9:13:35 PM (IST)

எஸ்பிஐ  ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு அபராதம் விதித்து குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பு அளித்தது. 

குமரி மாவட்டம், தக்கலை சாரோடு கோவில்விளை பகுதியில் வசித்து வரும் ஓய்வுபெற்ற வங்கிப்பணியாளர் ரவி என்பவர் தனது பணிக்காலத்திலேயே தனது வீட்டிற்கு அருகாமையிலுள்ள SBI வங்கியில் ரூ. 6 லட்சமும் டாப்அப் முறையில் ரூ.5,50,000மும் வீட்டு பராமரிப்பு கடன் பெற்றுள்ளார். வீட்டுக்கடன் பெறும்போது வீட்டை காப்பீடு செய்ய வங்கி தெரிவித்தபடி SBI General Insurance Company நிறுவனத்தில் ரூ.12,00,000/-க்கு காப்பீடு தொகை ரூ. 3215/- 25.5.2016-ல் செலுத்தியுள்ளார்.

காப்பீடு காலம் 22.5.2016 முதல் 21.5.2026 வரை உள்ளதாகும். வங்கி மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனத்தினர் வீட்டை நேரில் பார்வையிட்டு கடன்தொகை வழங்கி காப்பீட்டுத்தொகையும் வசூல் செய்தபோது எந்த நிபந்தனையும் தெரிவிக்கவில்லை. கடனுக்கான தொகைப் பிடித்தம் மாதந்தோறும் நடைபெறுகிறது. வீட்டின் சுவர் ஒன்று 16.7.2022 நாளில் பெய்த பெருமழையில் இடிந்து விழுந்துள்ளது. சுவர் இடிவால் மாடிப்பகுதிக்கு ஏறிச்செல்லும் மரத்திலான ஏணிப்படியும் கதவும் சேதமடைந்துள்ளது. 

வீட்டின் சுவர் இடிந்து விழுந்துள்ள விபரம் வங்கி மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனத்தினருக்கு அன்றைய நாளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இழப்பீட்டுக்கான தொகை கிடைக்க இணையவழி மூலம் விண்ணப்பிக்க தெரிவித்தபடி விண்ணப்பித்துள்ளார். இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பொறுப்பாளர் இடத்தை நேரில் பார்வையிட்டு இழப்பீட்டுத் தொகை கிடைக்க ஆவன செய்வதாக பதிலளித்தும் சென்றுள்ளார். 

ஆனால், 25.8.2022 தேதியிட்டு வரப்பெற்ற பதிலில் காப்பீடுத்தொகை மறுக்கப்பட்டுள்ளதாக இருந்தது. காப்பீட்டுத்தொகை முதல் எதிர்தரப்பினா வங்கிவழி பிடித்தம் செய்யப்பட்டு செலுத்தப்பட்டுள்ளதால் காப்பீட்டுத்தொகை கிடைக்க உதவி செய்து தரும்படி கேட்டு 6.9.22, 10.11.22-ல் வங்கிக்கு கடிதங்கள் கொடுத்துள்ளார்.

சுமார் 25 அடி நீளமும் 30 அடி உயரமும் கொண்ட ஒருபக்க சுவரை மட்டும் கட்டி எழுப்புவதற்கு செலவாகும் ரூ.4 லட்சம் இழப்பீட்டுத்தொகை, மனவுளைச்சலுக்கான நிவாரணம், மற்றும் வழக்குச் செலவுத் தொகை கிடைக்கக்கேட்டு கன்னியாகுமரி ஜில்லா கன்சியூமர் புரொட்டக்சன் சென்டரின் தலைவர் எம்.தாமஸ் ன்பவரிடம் 12.11,2022-ல் புகார்மனு கொடுத்து எதிர்தரப்பினர்களுக்கு 15.11.2022-ல் விளக்கம் கேட்டு பதிவுத்தபால் அனுப்பப்பட்டது.

15.2.2023-60 எதிர்தரப்பினர்களிடமிருந்து வரப்பெற்ற பதிலில் பொதுச்சுவர் இடிவு எனும் காரணத்தால் காப்பீட்டுத்தொகை நிராகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இயற்கை மழையால் ஏற்பட்ட சுவர் இடிவுக்குரிய இழப்பீட்டுத்தொகை இன்சூரன்ஸ் நிறுவனத்தால் வழங்கப்படாமையால் மாண்புமிகு ஆணையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் கே.எஸ்.சுரேஷ், உறுப்பினர் ஏ.சங்கர் ஆகியோர் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக்காட்டி ரவி-க்கு வீட்டின்சுவர் இடிவுக்குரிய இழப்பீட்டுத்தொகை ரூ.4,00,000/-ஐ இணையவழி பதிவு செய்த 11.8.2022 முதல் 6% வருட வட்டியுடனும், மனவுளைச்சலுக்கு நிவாரணத் தொகையாக ரூ.15,000/- மற்றும் வழக்குச் செலவுக்கு ரூ.5,000/- ஆகியவற்றை இன்சூரன்ஸ் நிறுவனம் 4 வார காலத்திற்குள் வழங்க வேண்டுமென்றும் தொகை வழங்குதில் காலதாமதம் ஏற்பட்டால் மொத்த தொகைக்கும் 6% வருட வட்டி வழங்கப்பட வேண்டுமென்றும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory