» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நெல்லை மாவட்டத்தில் இயல்பைவிட குறைவான மழை பொழிவு : ஆட்சியர் தகவல்!
வெள்ளி 22, செப்டம்பர் 2023 4:59:22 PM (IST)

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், தலைமையில் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இன்று (22.09.2023) வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், தெரிவித்ததாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் ஆகஸ்ட் 2023 மாதத்தில் 15.83 மி.மீ மழை பெய்துள்ளது. இது வளமையான மழையளவைவிட 32.06 சதவிகிதம் குறைவாகும்.
நடப்பு செப்டம்பர் மாதத்தில் இதுவரையில் 24.70 மி.மீ மழை கிடைத்துள்ளது. இது வளமையான மழையளவை விட 18.20 சதவிகிதம் குறைவாகும். இதனால் ஏற்பட்டுள்ள பயிர் சாகுபடி குறைவு குறித்த விரிவான விபரம் அரசுக்கு அறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நடப்பு மாதம் வரை முன்கார் பருவத்தில் 870 ஹெக்டேர் பரப்பிலும் மற்றும் கார் பருவத்தில் 3046 ஹெக்டேர் பரப்பில் நெல் சாகுபடியும், 250 ஹெக்டேர் பரப்பில் சோளம், கம்பு ஆகிய சிறுதானிய பயிர்களும், 1604 ஹெக்டேர் பரப்பில் பயறுவகை பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், மாசிப்பட்டத்தில் 431 ஹெக்டேர் பரப்பில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் மாவட்டத்தில் இதுவரை 3656 ஹெக்டேர் பரப்பில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டு சர்வேதச சிறுதானிய ஆண்டாக அனுசரிக்கப்படுவதால் விவசாயிகள் தண்ணீர் குறைவாக பயன்படுத்தப்படும் சிறுதானிய பயிர்களை அதிக அளவில் சாகுபடி செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், நடப்பு ஆண்டில் மாற்றுப் பயிர் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 1825 ஹெக்டேர் பரப்பில் சிறுதானிய பயிர்கள் சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் விவசாயிகள் தாங்கள் பயிரிடும் நிலங்களின் மண் வளத்தை பெருக்கிட குளங்களில் வண்டல் மண்ணை இலவசமாக எடுத்து தங்கள் நிலங்களுக்கு பயன்படுத்தும் பொருட்டு, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள பொதுப்பணித்துறை (நீ.ஆ.து) மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் 219 குளங்களில் 542 விவசாயிகள் 125397 க.மீ வண்டல் மண் எடுத்து பயன்பெற்றுள்ளனர். தற்பொழுது விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று மாவட்ட அறிவிக்கை செய்யப்பட்டு விவசாய பயன்பாட்டிற்கு வண்டல் மண் எடுத்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், தொடர்ந்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி கூடுதல் பயனாளிகள் வண்டல் மண் எடுத்து பயன்பெற கனிமவளத்துறை மற்றும் வேளாண்மை சார்துறைகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனை வடகிழக்கு பருவமழை காலத்திற்கு முன்பாக பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
2023-2024ம் ஆண்டில் நீர்நிலைகள் தூர்வாரும் பணிகளின்;; கீழ்; கோடைமேலழகியான் கால்வாய் எல்.எஸ்.0 முதல் 7.50 கி.மீ வரை அடையக்கருங்குளம் கிராமம் மற்றும் அம்பாசமுத்திரம் பகுதிகளிலும், நதியுண்ணி கால்வாய் எல்.எஸ்.2.00 முதல் 6.00 கி.மீ மற்றும் எல்.எஸ்.7.00 முதல் 9.00 கி.மீ வரை ஆலடியூர் கிராமம் மற்றும் அம்பாசமுத்திரம் பகுதிகளிலும், கன்னடியன் கால்வாய் எல்.எஸ்.0.00 முதல் 6.50 கி.மீ வரை திம்மராஜபுரம், கல்லிடைகுறிச்சி,
மற்றும் வெள்ளாங்குளி பகுதிகளிலும், கோடகன் கால்வாய் எல்.எஸ்.11.10 முதல் 12.10 கி.மீ மற்றும் எல்.எஸ்.17.50 முதல் 20.20 கி.மீ வரை கொண்டாநகரம், பேட்டை ரூரல், பேட்டை கிராமப் பகுதிகளிலும், பாளையங்கால் கால்வாய் 4 கி.மீ வரை புத்தனேரி, சீதப்பனேரி, மற்றும் பாளையங்கோட்டை கிராமப் பகுதிகளிலும், பெருங்கால் கால்வாய் எல்.எஸ். 0 முதல் 3.50 கி.மீ வரை மணிமுத்தாறு கிராமப் பகுதிகளிலும் தூர்வாரப்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சித்துறையின்; கீழ் மராமத்துப்பணி மேற்கொள்ளப்பட வேண்டிய C&D வாய்க்கால்களின் விபரம் பொதுபணித்துறை (நீ.வ.து)-யிடம் பெற்று ரூ.328.345 இலட்சம் மதிப்பீட்டில் 39 பணிகளுக்கான நிர்வாக அனுமதி ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் அளிக்கப்பட்டு மகாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நடப்பு 2023-24ஆம் நிதியாண்டில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் திருநெல்வேலி மாவட்டத்தில் 41 கிராம பஞ்சாயத்துகள் தெரிவு செய்யப்பட்டு 28 உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் 13 உதவி தோட்டக்கலை அலுவலர்கள் பொறுப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு ஆரம்ப கட்ட பணிகளாக 10 ஏக்கர் வரை தரிசாக உள்ள தொகுப்புகள் கண்டறியும் பணியும், தகுதிவாய்ந்த பயனாளிகளின் விபரங்கள் செயலியில் பதிவேற்றம் செய்யும் பணியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் 17100 தென்னை மரக்கன்றுகள் விவசாய குடும்பங்களுக்கு தலா 2 வீதம் வழங்கப்பட்டு வருகிறது.
பாரத பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதி வழங்கும் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் தற்போது வரை 1847 விவசாயிகளுக்கு கைப்பேசி செயலி மூலமாக வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை களப் பணியாளர்கள் கொண்டு ந-முலுஊ பதிவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 1950 விவசாய பயனாளிகளுக்கு ந-முலுஊ செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே இத்திட்டத்தில் தொடர்ந்து பயன்பெற விவசாயிகள் தங்களின் ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண்ணை வங்கி கணக்கு உடன் இணைத்து eKYC செய்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது.
ஆகஸ்ட் 2023-ம் மாதத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மொத்தம் 117 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இவற்றுள் வேளாண்மை சார்;ந்த மனுக்கள் 77 எண்களும், வேளாண்மை சாராத மனுக்கள் 40 எண்களும் பெறப்பட்டு, மனுக்களுக்குரிய பதில்கள் விவசாயிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
தொடர்ந்து வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் மாவட்ட அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் வெற்றி பெற்ற 2 விவசாயிகளுக்கு பரிசுத்தொகையினையும், தோட்டக்கலைத் துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வள்ர்ச்சி திட்டத்தின் கீழ் 2 விவசாயிகளுக்கு பழச்செடி தொகுப்புகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்கள்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா , உதவி ஆட்சியர் பயிற்சி கிஷன் குமார்.சீ, இணை இயக்குநர் வேளாண்மை (பொ) அசோக்குமார் , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) க.கிருஷ்ணகுமார் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் முதிர்வுத் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
வெள்ளி 9, மே 2025 4:00:54 PM (IST)

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டை பதிவு செய்ய சிறப்பு முகாம்: ஆட்சியர்
வெள்ளி 9, மே 2025 3:44:06 PM (IST)

பிளஸ் 2 பொதுத் தேர்வில் குமரி மாவட்டம் 5 வது இடம்பெற்று சாதனை : ஆட்சியர் வாழ்த்து
வெள்ளி 9, மே 2025 10:12:02 AM (IST)

பிளஸ் 2 மாணவருடன் பள்ளி மாணவி ஓட்டம்? குமரி அருகே பரபரப்பு
வியாழன் 8, மே 2025 5:24:43 PM (IST)

குமரி மாவட்டத்தில் பள்ளி வாகனங்களை ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 8, மே 2025 5:15:12 PM (IST)

தக்கலை ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
புதன் 7, மே 2025 5:14:58 PM (IST)
