» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

உலக திறன் போட்டிகள் தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு - ஆட்சியர் தகவல்!

வெள்ளி 22, செப்டம்பர் 2023 4:24:41 PM (IST)

நாகர்கோவிலில் நடைபெற உள்ள மாவட்ட அளவிலான திறன் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "உலக திறன் போட்டிகள் என்பது 1950-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தொடர்ச்சியாக நடைபெற்று வரும் திறன் சோதனை போட்டியாகும். அந்த வகையில் 77 நாடுகள் பங்குபெறும் 47-வது உலக திறன் போட்டிகள் பிரான்ஸ் நாட்டின் லியோன் நகரில் வைத்து 10-15 செப்டம்பர் 2024 தேதியில் நடைபெறவுள்ளது.

மேற்படி திறன் போட்டிகளில் கலந்து கொள்ளும் ஆர்வம் கொண்டு கன்னியாகுமரி மாவட்டத்தை சோந்த சுமார் 748 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துள்ளனர். முதற்கட்டமாக மேற்படி போட்டியாளர்களின் திறன்களை சோதித்தறியும் விதமாக மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் 24.09.2023 தேதியில் பெண்கள் கிறிஸ்துவ கல்லூரி, நாகர்கோவிலில் வைத்து கொள்குறி வடிவிலான தேர்வாக நடைபெறவுள்ளது.

காலை 11.00 மணி முதல் மதியம் 12.00 வரை நடைபெறவுள்ள மேற்படி தேர்விற்கு விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களின் தேர்வு நுழைவுச்சீட்டு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் https://naanmudhalvan.tn.gov.in/tnskills/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் மேற்படி இணையதளத்தில் சென்று தங்கள் தேர்வு நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இது குறித்து மேலும் விவரங்களுக்கு நாகர்கோவில், கோணம், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் இயங்கும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தினை நேரிலோ அல்லது 04652-264463 / 9443579558 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory