» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வந்தே பாரத் ரயில் கோவில்பட்டியில் நின்று செல்ல நடவடிக்கை : கடம்பூர் செ.ராஜூ கோரிக்கை

வெள்ளி 22, செப்டம்பர் 2023 3:17:14 PM (IST)



வந்தே பாரத் ரயில் கோவில்பட்டி ரயில்வே நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கோரிக்கை விடுத்துள்ளார். 

சென்னை- நெல்லை இடையே வருகிற செப். 24-ஆம் தேதி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலமாக துவக்கி வைக்கிறார். இந்நிலையில் வந்தே பாரத் ரயில் கோவில்பட்டி ரயில்வே நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ சென்னையில்  தென்னக ரயில்வே பொது மேலாளரை 2வது முறையாக  சந்தித்து இன்று கோரிக்கை மனு அளித்தார்.  கோரிக்கை மனுவினை பெற்றுக் கொண்ட தென்னக இரயில்வே மேலாளர் பரிசீலித்து ஆவண செய்வதாக கூறியுள்ளார்.


மக்கள் கருத்து

TutySep 23, 2023 - 09:32:37 PM | Posted IP 172.7*****

சென்னை- நெல்லை வந்தே பாரத் முன்பதிவு தொடங்கியது* சென்னை - நெல்லை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி நாளை (செப்.24) காலை 11.30 மணிக்கு காணொளி மூலம் தொடங்கி வைக்கிறார். 25ம் தேதி முதல் சென்னையில் இருந்து நெல்லைக்கும், 27ம் தேதி முதல் நெல்லையில் இருந்து சென்னைக்கும் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. இந்நிலையில், இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. சாதாரண ஏசி சேர் கட்டணம் ரூ.1,610, முதல் வகுப்பு ரூ.3,005ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

KATHIRSep 23, 2023 - 07:56:52 PM | Posted IP 172.7*****

satharana rail kettal nalla irukkum. guruvayur express poll.

K. P. MSep 23, 2023 - 07:54:41 AM | Posted IP 172.7*****

கோவில்பட்டியில் நின்று சென்றால் தூத்துக்குடி செல்வோருக்கும் கோவில்பட்டி மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்

டிக்கட்Sep 22, 2023 - 04:19:58 PM | Posted IP 172.7*****

எவ்வளவு காசு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory