» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மது குடிப்பதை தந்தை கண்டித்தால் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை!

வெள்ளி 22, செப்டம்பர் 2023 12:18:08 PM (IST)

பசுவந்தனை அருகே மது குடிப்பதை தந்தை கண்டித்தால் பிராந்தியில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் மூர்த்தி மகன் வேல்முருகன் (28). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் தினசரி வீட்டுக்கு குடிபோதையில் வருவதால் அவரது தந்தை சத்தம் போட்டுள்ளார். இதனால் மன வேதனை அடைந்த வேல்முருகன் பிராந்தியில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து பசுவந்தனை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முத்துமணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து

தமிழன்Sep 22, 2023 - 12:24:45 PM | Posted IP 162.1*****

காரணம் குடி . வாழ்க டாஸ்மாக், வாழ்க திராவிடம்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory