» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் திடீர் மாயம் : போலீசார் விசாரணை!

வெள்ளி 22, செப்டம்பர் 2023 12:08:36 PM (IST)

ஏரல் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சித்திரை பாண்டியன். இவரது மகள் முத்து பிரியா (25), அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாம். இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி பள்ளிக்கு சென்றவர் பின்பு வீடு திரும்பவில்லை.

அவர் எங்கு சென்றார் என்ற விபரம் தெரியவில்லை. இது  குறித்து அவரது தந்தை சித்திரைப் பாண்டியன் ஏரல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமீதா வழக்கு பதிவு செய்துள்ளார். அவர், மாப்பிள்ளை பிடிக்காததால் வீட்டை விட்டு சென்றாரா?  அல்லது வேறு எதுவம் காரணம் உள்ளதா என்று விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து

NALLAVANSep 22, 2023 - 04:03:51 PM | Posted IP 172.7*****

பெண்கள் தொலைக்காட்சியில் சீரியல் பார்க்காதீர்கள் ..... குடும்பம் நாசமாகி விடும்.....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory