» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடியில் 2 சவர்மா கடைகளுக்கு சீல்: உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை!!

வெள்ளி 22, செப்டம்பர் 2023 8:15:32 AM (IST)

தூத்துக்குடியில் உணவு பாதுகாப்புத் துறையினா் நடத்திய சோதனையில், 2 ஷவா்மா கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. காலாவதியான ஷவா்மா மசாலா, சிக்கன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. 

தூத்துக்குடியில் உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் மாரியப்பன் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலா்கள் சிவக்குமாா், சக்திமுருகன், காளிமுத்து, ஜோதிபாஸூ ஆகியோா் கொண்ட குழுவினா் சோதனையை மேற்கொண்டனா். தூத்துக்குடி 3-ஆவது மைல், அண்ணா நகா், வ.உ.சி மாா்க்கெட் சாலை, எட்டயபுரம் சாலை, கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம், சாத்தூா் சாலை ஆகிய பகுதிகளில் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 16 ஷவா்மா கடைகள் ஆய்வு செய்யப்பட்டன.

இந்த ஆய்வின்போது, உணவு பாதுகாப்புத் துறைக்குத் தவறான தகவல் வழங்கி, உரிமத்திற்குப் பதிலாக உணவு பாதுகாப்பு பதிவுச் சான்றிதழ் பெற்ற 2 ஷவா்மா கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும், ஒரு புரோட்டா கடையை ஆய்வு செய்ததில், அதன் உணவு பாதுகாப்பு உரிமம் காலாவதியாகியிருந்தது கண்டறியப்பட்டு, அதன் இயக்கத்தை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டது.

சுகாதாரமற்ற உணவுப் பொருள்களின் விற்பனை குறித்து நுகா்வோருக்குத் தெரியவந்தால், மாநில உணவு பாதுகாப்புத் துறை ஆணையா் அலுவலகத்தின் வாட்ஸ்ஆப் எண் 9444042322 , கால் யுவா் கலெக்டா் புகாா் எண் 86808 00900 என்ற புகாா் எண் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் புகாா் அளிக்கலாம் என நியமன அலுவலா் தெரிவித்துள்ளாா். ஏதேனும் விபரீதம் நடந்தால் மட்டும் சோதனை நடத்துவதே வாடிக்கையாக உள்ளது. அதிகாரிகள் முறையாக தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.


மக்கள் கருத்து

AllwinSep 22, 2023 - 06:27:00 PM | Posted IP 172.7*****

Antha kadaigalin peyargal kuripidapattal makkal vizhippunarvudan seyalpada udhavum

ஆமாSep 22, 2023 - 09:42:43 AM | Posted IP 162.1*****

வாரம் வாரம் சோதனை பண்ண மாட்டார்களாம் , யாராவது சாப்பிட்டு இறந்துவிட்டால் மட்டும் சோதனை செய்வார்களாம்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory