» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
இரட்டை பாதை பணிக்காக சந்தையடி ரயில்வே கேட் இன்று மாலை முதல் காலை வரை அடைப்பு
வியாழன் 21, செப்டம்பர் 2023 4:32:53 PM (IST)
இரட்டைரயில் பாதை பணிகள் காரணமாக இன்று (21-ந்தேதி) மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணிவரை ரயில்வே கேட் மூடப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
குமரி மாவட்டம், தென் தாமரைகுளம் அருகே சந்தையடி ஊரில் 2ரயில்வே கேட்டுகள் உள்ளது. இதில் ஒன்று சந்தையடி ஊருக்குள் செல்லும் வழியிலும், மற்றொன்று கோட்டையடியிலிருந்து கொட்டாரம் செல்லும் சாலையில் சந்தையடியில் உள்ளது. இந்த ரயில்வே கேட் சந்தையடி, இடை யன்விளை, வெள்ளையன் தோப்பு, ஈச்சன்விளை, மேலசந்தையடி, விஜயநகரி, கரும்பாட்டூர், கோட்டையடி ஆகிய பகுதி மக்கள் அதிகம் பயன்படுத்தும் மிகவும் பிரதான சாலையில் அமைந்துள்ள ரயில்வே கேட்டாகும்.
அந்த இடத்தில் இரட்டைரயில் பாதை அமைக்கும் பணி நடைபெறுவதால் இன்று (21-ந்தேதி) மாலை6 மணிமுதல் நாளை காலை 6 மணிவரை ரயில்வே கேட் மூடப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. சந்தையடி ஊரில்உள்ள மற்றொரு கேட்டு அடைக்கப்படாததால் அந்த கேட் வழியாக வாகனங்கள் செல்லவும் ஏற்பாடு செ ய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த ரயில்வே கேட் வழியாக செல்லும் ஊர் மக்களின் வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்வதற்கு அறிவிப்பு பலகை ரயில்வே நிர்வாகம் சார்பில் வைக்க ப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிளஸ் 2 பொதுத் தேர்வில் குமரி மாவட்டம் 5 வது இடம்பெற்று சாதனை : ஆட்சியர் வாழ்த்து
வெள்ளி 9, மே 2025 10:12:02 AM (IST)

பிளஸ் 2 மாணவருடன் பள்ளி மாணவி ஓட்டம்? குமரி அருகே பரபரப்பு
வியாழன் 8, மே 2025 5:24:43 PM (IST)

குமரி மாவட்டத்தில் பள்ளி வாகனங்களை ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 8, மே 2025 5:15:12 PM (IST)

தக்கலை ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
புதன் 7, மே 2025 5:14:58 PM (IST)

இன்ஸ்டாகிராமில் பழகி சிறுமியை பாலியல் தொழில் ஈடுபடுத்த முயற்சி: 4பேர் கைது!
புதன் 7, மே 2025 5:12:36 PM (IST)

பயிற்சி மாணவர்கள் நோயாளிகளுக்கு மருந்துகள் விநியோகம் செய்யக்கூடாது: ஆட்சியர் அறிவுறுத்தல்
புதன் 7, மே 2025 12:32:08 PM (IST)
