» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் வளர்ச்சித்திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆட்சியர் கலந்தாய்வு!

வியாழன் 21, செப்டம்பர் 2023 3:39:41 PM (IST)



கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், பல்வேறு துறைகள் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து, துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவிக்கையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட வருவாய்த்துறை, வனத்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை (கட்டடம், நீர்வளம்), ஊரக வளர்ச்சி முகமை, மகளிர் திட்டம், 

மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள், நெடுஞ்சாலைத்துறை, பொது சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித்துறை, மின்சாரத்துறை, வேளாண்மைத்துறை, குடிநீர் வடிகால் வாரியத்துற, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மாவட்ட வழங்கல் துறை, ஆவின், தாட்கோ, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்துறை, சமூக நலத்துறை உட்பட பல்வேறு துறைகள் சார்பில், நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்தும், முடிவடைந்த பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் தன்னார்வலர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் முன்வைக்கும் கோரிக்கையினை உடனுக்குடன் ஆய்வு மேற்கொண்டு, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. தற்போது மழைக்காலம் என்பதால் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பள்ளி கட்டிடங்களின் உறுதி தன்மையினை பொதுப்பணித்துறை, வருவாய் துறை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு பழுதடைந்த கட்டிடங்களை சீரமைத்திட உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது. 

குறிப்பாக மலைவாழ் கிராமங்களில் உள்ள கட்டிடங்களை உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அங்கன்வாடி மையங்களில் மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும் கண்காணிக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு துறைகளின் சார்பில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், மாவட்ட வன அலுவலர் இளையராஜா, பத்மநாபபுரம் சார் ஆட்சியர் எச்.ஆர்.கௌசிக், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் க.சேதுராமலிங்கம், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராஜட் பீட்டன், கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் சுப்பையா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சங்கரநாராயணன், மாவட்ட சமூக நல அலுவலர் சரோஜினி, செயற்பொறியாளர் (நீர்வளத்துறை) ஜோதிபாசு, தோட்டக்லைத்துறை துணை இயக்குநர் ஷீலா ஜாண், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை)கீதா, மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, உட்பட அனைத்துத் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory