» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவிலில் விநாயகர் சிலை ஊர்வலம்: போக்குவரத்து காவல்துறை முக்கிய அறிவிப்பு!

வியாழன் 21, செப்டம்பர் 2023 10:04:00 AM (IST)

நாகர்கோவிலில் விநாயகர் சிலை ஊர்வலம் தொடர்பாக போக்குவரத்து காவல்துறையின் பொதுமக்களுக்கான ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வரும் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய நாட்களில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலமானது நாகராஜா திடலில் இருந்து ஆரம்பித்து நாகர்கோவில் மாநகரின் முக்கிய சாலைகளான ஒழிகினசேரி, வடசேரி, டவர் ஜங்ஷன், வேப்பமூடு, அண்ணா பேருந்து நிலையம், கோட்டார் செட்டிகுளம், சவேரியார் சந்திப்பு, கம்பளம், பீச் ரோடு, ஈத்தாமொழி பிரிவு வழியாக சொத்தவிளை மற்றும் சங்குத்துறை கடற்கரைக்கு செல்வதால் மாலை 3 மணி முதல் 6 மணி வரை மேலே குறிப்பிடப்பட்ட சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

எனவே வெளியூர் பயணம் செல்பவர்கள், ரயில் நிலையம், விமான நிலையம் செல்பவர்கள் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்கள் தங்களது பயணநேரத்தை முன்கூட்டியே மாற்றம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் கன்னியாகுமரி பேருந்து நிலையத்திலிருந்து அண்ணா பேருந்து நிலையம் செல்லும் அரசு பேருந்துகள் அனைத்தும் இடலாக்குடி, நாயுடு மருத்துவமனை, ரயில்வே ரோடு வழியாக கோட்டார் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும்

மேலும் ராஜாக்கமங்கலம், ஆசாரிப்பள்ளம் , பார்வதிபுரம் மார்க்கமாக அண்ணா பேருந்து நிலையம் செல்லும் அனைத்து அரசு பேருந்துகளும் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும். மேலும் தக்கலை, மார்த்தாண்டம், களியக்காவிளை மார்க்கமாக அண்ணா பேருந்து நிலையம் செல்லும் அனைத்து அரசு பேருந்துகளும் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என பொதுமக்களுக்கு தெறிவித்துக் கொள்ளபடுகிறது.

மேலும்,  வழித்தடம் மாற்றம் செய்யப்பட்ட நேரம் மாலை 3 மணி முதல் 6 மணி வரை (சிலை கரைப்பு ஊர்வலமானது நாகர்கோவில் மாநகரை கடந்து செல்லும் வரை வழித்தடமாற்றம் தொடர்ந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory