» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மது பிரியர்களின் பார் ஆக மாறும் பூங்கா: மேயர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
புதன் 20, செப்டம்பர் 2023 8:49:48 PM (IST)

தூத்துக்குடியில் பூங்காக்களை உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என சமத்துவ மக்கள் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் மேயருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பூபால ராயபுரம் கருப்பட்டி சொசைட்டி ரவுண்டானா பகுதியில் அமைந்துள்ள 2 பூங்காக்களில் உள்ள சிறுவர் சிறுமியர்கள் பொழுது போக்குக்காக விளையாடக்கூடிய விளையாட்டு உபகரணங்கள் மிகவும் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது அதன் சுற்றுச்சுவர்கள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.
மேலும் அதன் எதிர்புறம் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கடையில் மது பாட்டில்களை வாங்கிக் கொண்டு வரும் நபர்கள் பூங்கா உள்ளே அமர்ந்து பார்போல் மது அருந்துவதும், கெட்ட கெட்ட தகாத வார்த்தைகளை பேசிக்கொண்டும் அமர்ந்திருப்பதனால் பூங்காவிற்கு பொதுமக்களும், குழந்தைகளும் வருவதில் மிகவும் அச்சப்படுகின்றனர். ஆகவே தயவு கூர்ந்து மேற்படி பூங்காக்களை உரிய முறையில் பராமரித்து உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து பொதுமக்களுக்கும் குழந்தைகளுக்கும் பயனுள்ளதாக உருவாக்கித் தரும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிளஸ் 2 பொதுத் தேர்வில் குமரி மாவட்டம் 5 வது இடம்பெற்று சாதனை : ஆட்சியர் வாழ்த்து
வெள்ளி 9, மே 2025 10:12:02 AM (IST)

பிளஸ் 2 மாணவருடன் பள்ளி மாணவி ஓட்டம்? குமரி அருகே பரபரப்பு
வியாழன் 8, மே 2025 5:24:43 PM (IST)

குமரி மாவட்டத்தில் பள்ளி வாகனங்களை ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 8, மே 2025 5:15:12 PM (IST)

தக்கலை ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
புதன் 7, மே 2025 5:14:58 PM (IST)

இன்ஸ்டாகிராமில் பழகி சிறுமியை பாலியல் தொழில் ஈடுபடுத்த முயற்சி: 4பேர் கைது!
புதன் 7, மே 2025 5:12:36 PM (IST)

பயிற்சி மாணவர்கள் நோயாளிகளுக்கு மருந்துகள் விநியோகம் செய்யக்கூடாது: ஆட்சியர் அறிவுறுத்தல்
புதன் 7, மே 2025 12:32:08 PM (IST)

ஏரியா காரன்Sep 21, 2023 - 08:42:02 AM | Posted IP 162.1*****