» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் தூய்மை பணி: ஆட்சியர் ஸ்ரீதர் துவக்கி வைத்தார்!
புதன் 20, செப்டம்பர் 2023 4:58:45 PM (IST)

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளை தூய்மைப்படுத்தும் பணியினை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், துவக்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் மாநகராட்சி பகுதிகளை தூய்மைப்படுத்துவது குறித்த விழிப்புணர்வு பேரணி இன்று (20.09.2023) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்து தெரிவிக்கையில் -
கன்னியாகுமரி மாவட்டத்தை குப்பையில்லா மாவட்டமாகவும், பசுமை மாவட்டமாகவும், முழு தூய்மையான மாவட்டமாகவும் மாற்றிடும் வகையில் பல்வேறு முன்னெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தவிர்ப்பதோடு, அந்த குப்பைகளை அவரவர் வீடுகளிலேயே மட்கும் குப்பை மட்காத குப்பை என தரம் பிரிந்து தூய்மைப்பணியாளர்களிடம் வழங்குவதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மேலும் அனைத்து பொதுமக்கள், இளைஞர்கள், தன்னார்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள் உள்ளிட்டோர் தாங்கள் வசிக்கும் பகுதிகளை தூய்மையாக வைத்திட முன்வர வேண்டும். நமது மாவட்டத்தை தூய்மையான மாவட்டமாக மாற்றும் முயற்சியில் உங்களுடைய குடும்பத்தாரையும், நண்பர்களையும், சுற்றத்தாரையும் முழு ஆர்வத்துடன் பங்கேற்க செய்ய வேண்டும் என்பதை இத்தருணத்தில் கேட்டுக்கொள்வதோடு, பொது இடங்களில் குப்பை கொட்டுவதை நமது மாவட்டத்தை முழு தூய்மையான மாவட்டமாக மாற்றிட வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
முன்னதாக மாவட்ட ஆட்சியர், நாகர்கோவில் மாநகராட்சி மேயர், ஆணையர் உள்ளிட்டோர் தூய்மை உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டு, பொதுமக்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கினார்கள். அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தினை தூய்மைப்படுத்தும் பணியினை மேற்கொண்டார்கள்.
நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், நாகர்கோவில் மாநகர் நல அலுவலர் ராம் குமார், நாகர்கோவில் துணை மேயர் மேரி பிரின்சி லதா, கோட்டாட்சியர் க.சேதுராமலிங்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சங்கரநாராயணன், மண்டலத் தலைவர் ஜவகர், உசூர் மேலாளர்கள் சுப்பிரமணியம் (குற்றவியல்), ஜூலியன் ஹூவர், மகளிர் கிறிஸ்தவ கல்லூரி மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் முதிர்வுத் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
வெள்ளி 9, மே 2025 4:00:54 PM (IST)

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டை பதிவு செய்ய சிறப்பு முகாம்: ஆட்சியர்
வெள்ளி 9, மே 2025 3:44:06 PM (IST)

பிளஸ் 2 பொதுத் தேர்வில் குமரி மாவட்டம் 5 வது இடம்பெற்று சாதனை : ஆட்சியர் வாழ்த்து
வெள்ளி 9, மே 2025 10:12:02 AM (IST)

பிளஸ் 2 மாணவருடன் பள்ளி மாணவி ஓட்டம்? குமரி அருகே பரபரப்பு
வியாழன் 8, மே 2025 5:24:43 PM (IST)

குமரி மாவட்டத்தில் பள்ளி வாகனங்களை ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 8, மே 2025 5:15:12 PM (IST)

தக்கலை ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
புதன் 7, மே 2025 5:14:58 PM (IST)
