» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

டிவி பார்த்ததை தாயார் கண்டித்ததால் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை!

புதன் 20, செப்டம்பர் 2023 10:52:55 AM (IST)

திங்கள்சந்தை அருகே டி.வி. பார்த்ததை தாயார் கண்டித்ததால் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம், திங்கள்சந்தை அருகே உள்ள வாடிவிளையை சேர்ந்தவர் செல்லத்துரை. கேரளாவில் கட்டிட வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி விமலா. இவர்களுக்கு ஜெபிலா (20) என்ற மகளும், 2 மகன்களும் இருந்தனர். மகன்கள் இருவரும் வெளியூர்களில் வேலை பார்த்து வருகின்றனர்.

மகள் ஜெபிலா வெள்ளமோடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் அடிக்கடி வீட்டு வேலை செய்யாமல் டி.வி. பார்த்து வந்ததாகவும், இதை தாயார் கண்டித்ததாகவும் தெரிகிறது.  இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் ஜெபிலா டி.வி. பார்த்ததை தாயார் கண்டித்ததாக கூறப்படுகிறது. பின்னர் மதியம் ஜெபிலா சாப்பிட்டு விட்டு அறையில் தூங்க சென்று விட்டார்.

சிறிதுநேரத்தில் அறையில் இருந்து ஜெபிலா வாந்தி எடுத்த சத்தம் கேட்டு தாயார் விரைந்து சென்று பார்த்தார். அப்போது அவர் விஷம் குடித்து வாந்தி எடுத்த நிலையில் மயங்கி கிடந்தார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு தலக்குளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஜெபிலா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory