» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் : குழித்துறை தடுப்பணையில் பொதுமக்கள் நடந்து செல்ல தடை!

புதன் 20, செப்டம்பர் 2023 10:49:16 AM (IST)

குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் குழித்துறை தடுப்பணை வழியாக பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் குளுமையான தட்ப-வெப்ப நிலை நிலவுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் விட்டுவிட்டு மழை பெய்து வந்த நிலையில் மாலையில் இருந்து நள்ளிரவு வரை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 

மாவட்டத்தில் பெய்துவரும் மழையால் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் பாய்கிறது. இந்த வெள்ளம் ஆற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையை மூழ்கடித்து செல்கிறது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் நடந்தோ, இருசக்கர வாகனங்களிலோ செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தடுப்பணை வழியாக யாரும் செல்லாதவாறு கம்பியால் தடுப்பு வைக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory