» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் ஆய்வு
செவ்வாய் 19, செப்டம்பர் 2023 4:30:59 PM (IST)

நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் குமரி மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் கள ஆய்வு மேற்கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், முன்னிலையில் இன்று (19.09.2023) நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டார். கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் நாளுக்கு நாள் ஏற்படும் வாகன நெரிசல் மற்றும் மக்கள் பெருக்கத்தின் காரணமாக சாலைகளில் பேருந்துகள் குறித்த நேரத்திற்கு செல்லவும், பயணிகள் தாங்கள் பயணம் செய்யும் இடத்திற்கான பேருந்துகளை எளிதாக கண்டறியும் வகையில் வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையம் விரிவாக்கம் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாகர்கோவிலில் இருந்து புறப்படும் புறநகர் பேருந்துகள், உள்ளுர் பேருந்துகள் ஆகியவற்றினை வெவ்வேறு பகுதிகளுக்கு சென்று பயணிக்க நேரிடுகிறது. பயணிகளின் வசதிக்காக உள்ளுர் மற்றும் புறநகர் பேருந்து அனைத்தும் ஒரு பேருந்து முனையத்திலிருந்து புறப்படும் வகையில் வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்தினை விரிவாக்கம் செய்வதற்காக அருகாமையில் உள்ள பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு மேற்கொண்டதோடு, புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமையப்பெற்றால் அதனால் பாதிப்புகள் ஏதும் ஏற்படுமா என்ற தொலைநோக்கு பார்வையில் தொழில்நுட்பம், பொருளாதாரம், வாகன நெரிசல், நகர வளர்ச்சி, நிதி நிலை உள்ளிட்டவைகளை மாவட்ட ஆட்சியர் கள மேற்கொண்டார்கள்.
அதனைத்தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாளச்சாக்கடை திட்டத்தின்கீழ் மூலதன மானிய நிதி ரூ.14.41 கோடி மதிப்பில் நடைபெற்றுவரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து தெங்கம்புதூர் ஆயக்கட்டு வரை 630 மி.மீ விட்டமுள்ள HDPE குழாய் 5.450 கி.மீ நீளத்திற்கு பதிக்கும் பணி நடைபெற்று வருவதையும், 4.15 இலட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட கழிவுநீர் சேகரிப்பு தரைமட்ட தொட்டியினையும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டார்கள்.
நாகர்கோவில் மாநகராட்சி உறுப்பினர்கள் இக்குழாயினை கால்வாயின் வலதுபுறமாக மாற்றியமைக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் மாவட்ட ஆட்சியர் இன்று கள ஆய்வு மேற்கொண்டு ஏற்கனவே பணிகள் நடைபெற்றுவரும் முறையிலேயே பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
நடைபெற்ற ஆய்வுகளில் நாகர்கோவில் மாநகர பொறியாளர் பாலசுப்பிரமணியம், வேளாண் விற்பனை துணை இயக்குநர் சுந்தர் டேனியல் பாலஸ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் பொறி.எஸ்.திருநாவுக்கரசு, உதவி நிர்வாக பொறியாளர் பொறி.பிரேம்நாத், உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டை பதிவு செய்ய சிறப்பு முகாம்: ஆட்சியர்
வெள்ளி 9, மே 2025 3:44:06 PM (IST)

பிளஸ் 2 பொதுத் தேர்வில் குமரி மாவட்டம் 5 வது இடம்பெற்று சாதனை : ஆட்சியர் வாழ்த்து
வெள்ளி 9, மே 2025 10:12:02 AM (IST)

பிளஸ் 2 மாணவருடன் பள்ளி மாணவி ஓட்டம்? குமரி அருகே பரபரப்பு
வியாழன் 8, மே 2025 5:24:43 PM (IST)

குமரி மாவட்டத்தில் பள்ளி வாகனங்களை ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 8, மே 2025 5:15:12 PM (IST)

தக்கலை ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
புதன் 7, மே 2025 5:14:58 PM (IST)

இன்ஸ்டாகிராமில் பழகி சிறுமியை பாலியல் தொழில் ஈடுபடுத்த முயற்சி: 4பேர் கைது!
புதன் 7, மே 2025 5:12:36 PM (IST)
