» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கிறிஸ்தவ ஆலய பங்குத்தந்தை திடீர் மாயம்: போலீஸ் விசாரணை

செவ்வாய் 19, செப்டம்பர் 2023 3:52:47 PM (IST)

கன்னியாகுமரி அருகே  பங்கு தந்தை காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கன்னியாகுமரி அருகே உள்ள கோவளத்தை சேர்ந்தவர் மைக்கேல் நியூமேன் (34). இவர் கன்னியாகுமரி புதுக்கிராமத்தில் உள்ள புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் பங்கு தந்தையாக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 6-ந்தேதி இரவு ஆலயத்தின் அருகில் உள்ள பங்குத்தந்தை இல்லத்தில் தூங்க சென்றார். 

மறுநாள் காலையில் அவரை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுபற்றி ஆலயத்தின் இணை பங்கு தந்தை அந்தோணி பிச்சை கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மைக்கேல் நியூமேனை தேடி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory