» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மூடுவிழா காண தயாராகும் பிஎஸ்என்எல் அலுவலகம்? பொதுமக்கள் குற்றச்சாட்டு!
செவ்வாய் 19, செப்டம்பர் 2023 12:52:08 PM (IST)

சேர்வைக்காரன்மடம் ஊராட்சியில் பிஎஸ்என்எல் நெட்வொர்க்கின் செயல் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சேர்வைக்காரன்மடம் ஊராட்சியில் தங்கம்மாள் புரத்தில் பிஎஸ்என்எல் கோபுரம் உள்ளது. மேற்படி முதன்முதலாக இந்த பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டு மக்கள் இச்சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.க டந்த 5வருடமாக செல்போன் அதிகரித்ததால் சேவைக்குறைபாடு வந்தநிலையில் பல்வேறு மனுக்கள் அளித்தும் அதன் சேவை திறன் அதிகப்படுத்தவில்லை.
இந்நிலையில் ஜியோ, ஏர்டெல் சேவை இந்த பகுதியில் வந்தது. ஆனால் பெரும்பாலான விவசாயிகள் பொதுமக்கள் இந்த அரசு செல்போன் சேவையை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். வாரத்தில் 5நாட்கள் சிக்னல் கிடைப்பதில்லை. இந்நிலையில் 4ஜீ வருகிறது என ஊரெல்லாம் நிர்வாகத்தினரால் தம்பட்டம் அடிக்கப்படுகிறது. ஆனால் இங்கு எந்த ஒரு பணியும் சரியாக நிர்வாகத்தினரால்செய்யப்படுவதில்லை.பராமரிக்கப்படுவதில்லை.
மின்தடை போகும்போது ஜெனரேட்டர் இருந்தும் சிக்னல் கிடைப்பதில்லை. ஊர் பெரியவர்கள் தானமாக மெயின்ரோட்டில் கிராமங்களின் தானமாக இந்த நிலத்தை அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாத பரிதபிக்கப்பட்ட நிலையில் உள்ளது. பழைய பேட்டரிகளையே இந்த நிலையத்திற்கு அளித்தும் கழித்து போட்ட பழைய பொருள்களை இந்த நிலையத்திற்கு உபயோகிப்பதால் செல்போன் சேவை பாதிக்கப்படுகிறதாக இந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.
விரைவில் கிடப்பில் போட்டு மூடுவிழா காண தயாராகின்றனரா? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பழைய பேட்டரிகளை மாற்றி புதிய பேட்டரிகளை அளித்து மற்றும் மக்கள் தேவைக்கேற்ப செயல் திறனை அதிகரிக்க வேண்டும் என சேர்வைகாரன்மடம் ஊராட்சி உபதலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா கோரிக்கை வைத்துள்ளார்.
மக்கள் கருத்து
tamilanSep 19, 2023 - 01:17:34 PM | Posted IP 172.7*****
நாடு முழுவதும் எவ்வளவோ சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவில் மூடுவது நல்லது.இப்பொழுது வரை பல இடங்களில் சிக்னல் பிரச்னை உள்ளது.
மேலும் தொடரும் செய்திகள்

பிளஸ் 2 பொதுத் தேர்வில் குமரி மாவட்டம் 5 வது இடம்பெற்று சாதனை : ஆட்சியர் வாழ்த்து
வெள்ளி 9, மே 2025 10:12:02 AM (IST)

பிளஸ் 2 மாணவருடன் பள்ளி மாணவி ஓட்டம்? குமரி அருகே பரபரப்பு
வியாழன் 8, மே 2025 5:24:43 PM (IST)

குமரி மாவட்டத்தில் பள்ளி வாகனங்களை ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 8, மே 2025 5:15:12 PM (IST)

தக்கலை ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
புதன் 7, மே 2025 5:14:58 PM (IST)

இன்ஸ்டாகிராமில் பழகி சிறுமியை பாலியல் தொழில் ஈடுபடுத்த முயற்சி: 4பேர் கைது!
புதன் 7, மே 2025 5:12:36 PM (IST)

பயிற்சி மாணவர்கள் நோயாளிகளுக்கு மருந்துகள் விநியோகம் செய்யக்கூடாது: ஆட்சியர் அறிவுறுத்தல்
புதன் 7, மே 2025 12:32:08 PM (IST)

RamalingamSep 20, 2023 - 01:36:01 PM | Posted IP 172.7*****