» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தனியார் பின்கார்ப் நிறுவனம் நஷ்ட ஈடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

வெள்ளி 3, பிப்ரவரி 2023 9:08:47 PM (IST)

சேவை குறைபாட்டினை சுட்டிக் காட்டி தனியார் பின்கார்ப் நிறுவனம் பாதிக்கப்பட்ட  நுகர்வோருக்கு ரூ.15,000 நஷ்ட ஈடு வழங்க குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரன்புதூர் கிராமத்தைச் சார்ந்த  பாலமுருகன் என்பவர் தோவாளையிலுள்ள ஒரு தனியார் பின்கார்ப் நிறுவனத்தில் நகைக்கடன் எடுத்திருந்தார். அடகு வைத்த நகைகளை திருப்புவதற்காக எதிர்தரப்பினரை தொடர்பு கொண்ட போது நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அசல் மற்றும் வட்டியினை செலுத்தி மேற்படி நகைகளை திருப்பி கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தனர். 

ஆனால் நுகர்வோருக்கு எந்த வித அறிவிப்பும் கொடுக்காமல் அடகு வைத்த நகைகளை ஏலத்தில் விடுவதற்கு முயற்சி செய்வதாக தெரிய வந்துள்ளது. உடனே மனுதாரர் நகையை திருப்ப பணத்துடன் நேரில் சென்றுள்ளார். ஆனால் அவரை அலைக்கழித்ததுடன் பணம் செலுத்திய நாளிலிருந்து 20 நாட்கள் கழித்து தான் நகையை திருப்பி தர முடியுமென நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது ஒரு சேவைக் குறைபாடு என்பதால் நுகர்வோர் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான பாலமுருகன் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் ஆ.சங்கர் ஆகியோர் தனியார் பின்கார்ப் நிறுவனத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு நஷ்ட ஈடு ரூ.15,000,  மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.5,000 ஆக மொத்தம்  ரூ.20,000 ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் எனவும், மேலும் அடகு தொகையை பெற்றுக் கொண்டு நகைகளை உடனடியாக திரும்ப வழங்க வேண்டுமெனவும் உத்தரவிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory