» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அரிவாளால் தாக்கி கொலை முயற்சி: ரவுடி கைது

வெள்ளி 3, பிப்ரவரி 2023 3:04:02 PM (IST)

ஸ்ரீவைகுண்டம் அருகே தகராறு செய்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சி ஈடுபட்ட ரவுடியை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன் மேற்பார்வையில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் குணசேகரன் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது, வெள்ளூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர்.

இதில், அதே பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகன் சிவராமலிங்கம் (எ) பெரியவன் (31) என்பவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சி ஈடுபட்டதும் தெரியவந்தது. உடனே போலீசார் சிவராமலிங்கம் (எ) பெரியவனை கைது செய்தனர். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம்  காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட சிவராமலிங்கம் (எ) பெரியவன் மீது ஏற்கனவே ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி வடபாகம், நாசரேத் ஆகிய காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உட்பட 10 வழக்குகளும், திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, முக்கூடல், முன்னீர்பள்ளம், சுத்தமல்லி பாப்பாக்குடி, ஆலங்குளம், சீதபற்பநல்லூர், வீரவநல்லூர், களக்காடு, சேர்ந்தமரம் ஆகிய காவல் நிலையங்களில் கொலை முயற்சி, திருட்டு உட்பட 15 வழக்குகளும், திருநெல்வேலி மாநகரத்தில் பாளையங்கோட்டை, பெருமாள்புரம், திருநெல்வேலி டவுன், மருத்துவக் கல்லூரி காவல் நிலையம் மற்றும் பேட்டை ஆகிய காவல் நிலையங்களில் கொலை முயற்சி, வழிப்பறி உட்பட 6 வழக்குகளும், சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உட்பட 2 வழக்குகளும், ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி காவல் நிலையத்தில் ஒரு கொலை மிரட்டல் வளர்க்கும் என 34 வழக்குகள் உள்ளது.


மக்கள் கருத்து

34 வழக்குFeb 3, 2023 - 08:11:56 PM | Posted IP 162.1*****

வெச்சுட்டு நாய எதுக்கு வெளிய விடுறீங்க...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory