» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

படுக்கை நோயாளிகளுக்கு தானியங்கி கழிப்பறை கட்டில்: குமரி கண்டுபிடிப்பாளருக்கு பாராட்டு!

சனி 6, ஆகஸ்ட் 2022 11:26:26 AM (IST)



முதியவர்கள் மற்றும் படுக்கை நோயாளிகளுக்காக தானியங்கி கழிப்பறை கட்டில் தயாரித்த குமரியைச் சேர்ந்த சரவண முத்து என்பவருக்கு முதல்வர் பாராட்டு தெரவித்ததார். 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் காப்பகங்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 31 புத்தொழில் நிறுவனங்களுக்கு தலா 5 லட்சத்திற்கான மானிய காசோலைகளை வழங்கினார். இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கபட்ட கண்டுபிடிப்பாளர் சரவணமுத்து என்பவரை முதல்வர் ஸ்டாலின் பாராட்டி மானியத் தொகையை வழங்கினார். 

முதியவர்கள் மற்றும் படுக்கை நோயாளிகள் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட தானியங்கி கழிப்பறை கட்டில் கண்டுபிடிப்புக்காக 2019ஆண்டு முன்னாள் குடியரசு தலைவரிடம் பரிசு மற்றும் ரூ.2 லட்சம் பரிசு  பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்து சாதாரண வெல்டிங் வேலை பார்த்து வந்த சரவணமுத்து தனது மனைவியின் அறுவை சிகிச்சைக்கு பிறகு அவர்களை பராமரித்து வந்த போது கழிப்பறை பயன்படுத்துவதில் ஏற்பட்ட சவால்களை மனதில் கொண்டு கட்டிலிலேயே கழிப்பறை வசதி செய்துள்ளார். மேலும் பல கண்டுபிடிப்பு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory