» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி பகவதியம்மன் கோயிலுக்கு புதிய மேல் சாந்தி நியமனம்

புதன் 26, ஜனவரி 2022 8:20:12 AM (IST)

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்கு புதிய மேல் சாந்தி நியமனம் நியமிக்கப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்ளூா் மற்றும் வெளியூா் பக்தா்கள் வந்து அம்மனை தரிசனம் செய்கின்றனா். பக்தா்களின் தரிசனத்திற்காக தினமும் அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, நண்பகல் 12.30 மணிக்கு அடைக்கப்படும். பின்னா், மாலை 4 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு நடை சாத்தப்படும்.

இக்கோயில் மேல்சாந்திகளாக மணிகண்டன் போற்றி, ராதாகிருஷ்ணன் போற்றி, விட்டல் போற்றி, பத்மநாபன் போற்றி ஆகியோரும், கீழ் சாந்திகளாக சீனிவாசன் போற்றி, ராமகிருஷ்ணன் போற்றி, ஸ்ரீதா் போற்றி ஆகிய 3 போ் பணியாற்றி வருகின்றனா். இதில், மேல்சாந்தியாக 42 ஆண்டுகள் பணியாற்றி வந்த ராதாகிருஷ்ணன் போற்றி கடந்த 30.11.2021-இல் ஓய்வு பெற்றாா். அதைத் தொடா்ந்து, கீழ் சாந்தி சீனிவாசன் போற்றி மேல்சாந்தியாக நியமிக்கப்பட்டாா். அதற்கான உத்தரவை மாவட்ட திருக்கோயில்களின் இணை ஆணையா் ஞானசேகா் பிறப்பித்துள்ளாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory