» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

வெள்ளி 22, அக்டோபர் 2021 3:29:31 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையில், "தூத்துக்குடி மாவட்ட குற்றவியல் வழக்கறிஞராக டி.மோகன்தாஸ் சாமுவேல், மாவட்ட உரிமையியல் வழக்கறிஞராக ஜே.பாலன், சிறப்பு மாவட்ட குற்றவியல் வழக்கறிஞராக வி.எல்லம்மாள், கூடுதல் மாவட்ட குற்றவியல் மற்றும் மாவட்ட உரிமையியல் வழக்கறிஞராக பி.ஆனந்த் கேப்ரியேல் ராஜ், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர்களாக டி.சேவியர், எம்.மாலாதேவி, கூடுதல் உரிமையியல் (LAOP) ஜே.பிரான்சிஸ் ஜூடுவினோத், அரசு பிலீடராக டி.சுபேந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளர்.

மேலும், கோவில்பட்டி கூடுதல் குற்றவியல் வழக்கறிஞராக எஸ்.வி.சம்பத்குமார், திருச்செந்தூர் குற்றவியல் வழக்கறிஞராக எம்.பாரிகண்ணன், திருச்செந்தூர் கூடுதல் உரிமையியல் வழக்கறிஞராக ஜே.எஸ்.டி.ஜாத்ராக், கோவில்பட்டி மாவட்ட உரிமையியல் முனிசீப் நீதிமன்ற வழக்கறிஞராக எம்.ராமச்சந்திரன்,  ஸ்ரீவைகுண்டம் உரிமையியல் முனிசீப் நீதிமன்ற வழக்கறிஞராக எம்.ஜாஜஹான், சாத்தான்குளம் உரிமையில் முனிசீப் நீதிமன்ற வழக்கறிஞராக ஏ.ரகுபத்மன், திருச்செந்தூர் உரிமையியல் முனிசீப் நீதிமன்ற வழக்கறிஞராக எஸ்.விஜி ஆகியோர் நியமனம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 


மக்கள் கருத்து

aaron sureshOct 22, 2021 - 08:19:07 PM | Posted IP 173.2*****

congrates sir

ஆசீர். விOct 22, 2021 - 04:32:31 PM | Posted IP 108.1*****

அருமை நண்பன் மோகன்தாஸ் சாமுவேலுக்கு இனிய வாழ்த்துக்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory