» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பொன்மனை முதல் வெண்டலிக்கோடு ரூ.2.52 கோடி மதிப்பில் சாலை விரிவாக்கப் பணிகள் துவக்கம்!
வியாழன் 14, அக்டோபர் 2021 12:11:31 PM (IST)

பொன்மனை முதல் வெண்டலிக்கோடு வரையில் ரூ.2.52 கோடி மதிப்பில் சாலை விரிவாக்கப் பணியினை அமைச்சர் த.மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் ஊராட்சி ஒன்றியம், பொன்மனை தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில், தமிழ்நாடு ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் (2020-2021) கீழ் ரூ.2.52 கோடி மதிப்பில் பொன்மனையிலிருந்து ஈஞ்சக்கோடு வழியாக வெண்டலிகோடு வரை 3.20 கி.மீ அளவிலான சாலை விரிவாக்க பணியினை தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் இன்று (13.10.2021) துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில், உதவி பொறியாளர் (நெடுஞ்சாலை மற்றும் கட்டமான பணிகள்) பொறி.தனசேகர், ஜெ.எம்.ஆர்.ராஜா, ஜோஸ், அலாவுதீன், சுரேஷ், பி.கிறிஸ்துதாஸ், டெய்சி ஏசுதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாஜக அரசுக்கு தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
சனி 4, ஏப்ரல் 2026 5:16:41 PM (IST)

ஈஸ்டர் திருநாள்: அன்பும், சகிப்புத்தன்மையும் பெருகட்டும் - விஜய் வசந்த் எம்.பி வாழ்த்து!
சனி 4, ஏப்ரல் 2026 4:48:36 PM (IST)

குமரி - திருப்பதி இடையே ஸ்லீப்பர் பஸ் வசதி அறிமுகம்: ஆன்மீகப் பயணிகள் மகிழ்ச்சி!
சனி 4, ஏப்ரல் 2026 3:38:08 PM (IST)

நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த சுற்றுலா வேன்: கன்னியாகுமரியில் பரபரப்பு!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 9:42:39 PM (IST)

காய், கனிகளால் ஜொலிக்கும் தேர்தல் விழிப்புணர்வு: கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் ஆர்வம்!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 12:06:12 PM (IST)

கோவில், வீடுகளில் திருட்டு: இருவர் கைது!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 10:37:15 AM (IST)

