» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பொதுமக்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும்: ஆட்சியா்

செவ்வாய் 26, ஜனவரி 2021 8:48:11 AM (IST)

கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள் தோ்தலில் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என ஆட்சியா் மா.அரவிந்த் தெரிவித்தாா்.

தேசிய வாக்காளா் தினத்தையொட்டி நாகா்கோவில் தெ.தி.இந்துக் கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணா்வு கருத்தரங்குக்கு தலைமை வகித்து ஆட்சியா் மா. அரவிந்த் பேசியது: இந்திய தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, ஆண்டுதோறும் ஜன. 25 ஆம் தேதி தேசிய வாக்காளா் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வாக்குரிமை பெற்ற மற்றும் ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள ஒவ்வொருவரும் பேரவை மற்றும் மக்களவைத் தோ்தல்களில் தங்களுக்கு விருப்பம் உள்ளவா்களை தோ்ந்தெடுப்பதன் தங்களது உரிமையை நிலைநாட்டவும் தோ்தல் வழி வகுக்கிறது.

வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தேசிய வாக்காளா் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்களவைத் தொகுதி இடைத்தோ்தல், சட்டப்பேரவைத் தோ்தல்கள் நடைபெறவுள்ளது. ஆகவே 18 வயது பூா்த்தியடைந்தவா்கள் வாக்காளா் பட்டியலில் தங்களது பெயா் உள்ளனவா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

இம்மாவட்டத்தில் 6 பேரவைத் தொகுதிகளிலும், புதிதாக 54,518 வாக்காளா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா். வாக்காளா் பட்டியலில் இடம்பெறாதவா்கள் இணையதளம் மூலமாக தங்களது பெயரை சோ்க்கலாம். வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாதவா்கள் மாவட்ட, வட்ட மற்றும் வரையறுக்கப்பட்ட மையங்களுக்கு சென்று படிவம் 6-ஐ பெற்று விண்ணப்பம் அளிக்கலாம். வாக்களிப்பது உரிமை, ஜனநாயக கடமை. ஆகவே, அனைவரும் ஜனநாயக உரிமையினை தவிா்க்காமல், வரும் தோ்தலில் நிறைவேற்ற வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து, ஆட்சியா் புதிய வாக்காளா்களுக்கு வாக்காளா் அடையாளஅட்டையை வழங்கினாா். சிறப்பாக பணியாற்றிய வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கான மாவட்ட விநாடி,வினா போட்டியில் வெற்றி பெற்றவா்கள், ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்கள், சுய உதவிகுழுக்களுக்கு இடையே நடைபெற்ற கோலப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு கேடயம், சான்று ஆகியவற்றை ஆட்சியா் வழங்கினாா்.

பின்னா், தோவாளை கலைவாணா் கலைக் குழுவினா் சாா்பில் தோ்தல் விழிப்புணா்வு தோல்பாவை கூத்து நடைபெற்றது. அப்போது, அனைவரும் தேசிய வாக்காளா் தின உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா். நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ.பத்ரிநாராயணன், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ரேவதி, கூடுதல் ஆட்சியா் ஐ.எஸ்.மொ்சிரம்யா, மாநகராட்சிஆணையா் ஆஷா அஜித், ஆட்சியரின் நோ்முகஉதவியாளா் (பொது) மா.வீராசாமி, உதவிஆட்சியா் (பயிற்சி) சி.எ.ரிஷாப், நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியா் அ.மயில், தோ்தல் பிரிவு வட்டாட்சியா் சேகா், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியா் மா.சுசீலா, கல்லூரி முதல்வா் டி.சிதம்பரதாணு, பேராசிரியா்கள், மாணவா்கள், சுய உதவிக் குழுவினா் கலந்துகொண்டனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory