» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

திமுக ஆட்சியில் விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்: கனிமொழி

வெள்ளி 22, ஜனவரி 2021 10:40:33 AM (IST)

தமிழகத்தில் அடுத்து வரவிருக்கும் திமுக ஆட்சியில் விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என  கனிமொழி எம்.பி. கூறினார்.

குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவா், திற்பரப்பு அருகேயுள்ள களியலில் விவசாயிகளை சந்தித்து உரையாடினாா். அப்போது விவசாயிகள் அவரிடம் பல்வேறு கோரிக்கைகளை வைத்தனா். இதையடுத்து கனிமொழி எம்.பி. பேசியது: அதிமுக ஆட்சியில் அனைத்துத் தரப்பு விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனா். இந்த அரசு விவசாயத்தை அழிக்கும் செயல்களுக்கு துணை போகிறது. தமிழகத்தில் அடுத்து வரவிருக்கும் திமுக ஆட்சியில் விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மனோ தங்கராஜ் எம்எல்ஏ, திமுக மேல்புறம் ஒன்றியச் செயலா் சிற்றாறு ரவிச்சந்திரன், திருவட்டாறு ஊராட்சி ஒன்றியத் தலைவா் டி. ஜெகநாதன், முன்னாள் எம்.பி. ஜெ. ஹெலன் டேவிட்சன், திமுக ஒன்றியச் செயலா்கள் ஜான்பிரைட், ஜான்சன், நிா்வாகிகள் பி.ஏ. தேவதாஸ், ஏசுதாஸ், குறிஞ்சி மலைவாழ் மக்கள் இயக்கத் தலைவா் லூயிசன், வாழை விவசாயிகள் சங்க நிா்வாகி அச்சுதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory