» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தமிழக முதல்வரின் நாகர்கோவில் பயணம் திடீர் ரத்து

ஞாயிறு 20, செப்டம்பர் 2020 11:41:20 AM (IST)

தமிழக முதல்வரின் நாகர்கோவில் பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சி நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் கொரோனா தடுப்பு குறித்து ஆய்வு கூட்டம் நடத்தி வருகிறார். இதில் வரும் 23ஆம் தேதி காலை தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வுக் கூட்டத்தை முடித்துவிட்டு, கார் மூலம் நாகர்கோவில் வருகை தர இருந்தார்.

இந்நிலையில் தமிழக முதல்வர் 22ஆம் தேதி காலை 11 மணிக்கு பிரதமருடன் காணொளி காட்சி மூலம் கலந்தாய்வு இருப்பதால் அவரது நாகர்கோவில் மாவட்ட நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சி நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory