» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

புறக்கடை கோழி வளர்ப்பு திட்டம் : வரும் 22ம் தேதிக்குள் விண்ணபிக்க ஆட்சியர் வேண்டுகோள்

ஞாயிறு 20, செப்டம்பர் 2020 11:27:11 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் கோழி அபிவிருத்தி திட்டத்தின்கீழ் தலா ஒரு பெண் பயனாளிக்கு 25 அசில் இன நாட்டுக்கோழிகள் வழங்கும் புறக்கடை கோழி வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரின் செய்திக்குறிப்பு  : வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் ஏழை பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும் வாழ்வாதாரத்திற்காகவும் தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல திட்டங்களில் ஒன்றான 2020-2021-ம் ஆண்டு கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தலா ஒரு பெண் பயனாளிக்கு 25 அசில் இன நாட்டுக்கோழிகள் வழங்கும் புறக்கடை கோழி வளர்ப்பு திட்டம் கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 400 பயனாளிகள் வீதம் 9 ஒன்றியத்திற்கு 3,600 பெண் பயனாளிகளுக்கு அசில் இன நாட்டுகோழிகள் வழங்கப்பட உள்ளது.

எனவே அந்தந்த கிராம பஞ்சாயத்துகளில் நிரந்தரமாக வசிக்கும் பெண் பயனாளிகள் இந்த திட்டத்தின் கீழ் நாட்டுகோழிகள் வளர்க்க விரும்பினால் அந்தந்த கால்நடை மருந்தக் கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் 30% பயனாளிகள் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வகுப்பினை சேர்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

மேலும் அரசின் விலையில்லா கறவை பசு, வெள்ளாடு/ செம்மறியாடு மற்றும் கோழிகள் வழங்கும் திட்டத்தில் இதுவரை பயன்பெறாதவர் விண்ணப்பதாரராக இருத்தல் வேண்டும். எனவே புறக்கடை கோழி வளர்ப்பு திட்டத்தில் பயன்பெற விரும்பும் பெண் பயனாளிகள் அந்தந்த கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி 22.09.2020-க்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே கேட்டுக்கொள்கிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory