» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஆன்லைனில் பிறப்பு, இறப்பு பதிவதில் பிரச்சனை : குமரி மாவட்ட பொதுமக்கள் புகார்

வியாழன் 2, ஜூலை 2020 12:39:38 PM (IST)குமரி மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் பிறப்பு, இறப்பு சான்று பதிவு செய்வதில் பிரச்சனைகள் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களுக்குமான பிறப்பு, இறப்புகள் தற்போது ஆன்லைன் வழியாக பதியப்படுகிறது. இதில் பொதுமக்கள் தங்கள் மாவட்டங்களை தேர்வு செய்து அதில் மருத்துமனையையும் தேர்வு செய்து பதிய வேண்டும். ஆனால் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட தமிழகத்தில் பிற மாவட்டங்களை தேர்வு செய்தால் அதில் மருத்துவமனைகள் வருகிறது என்றும் கன்னியாகுமரி மாவட்டத்தினை தேர்வு செய்தால் மருத்துவமனை விபரம் வரவில்லை என ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட மென்பாெருள் நிறுவனத்திடம் கேட்ட போது, உங்கள் பகுதி பஞ்சாயத்து சார்பில் மருத்துவமனை விபரங்களை அப்டேட் செய்தால் மட்டுமே மருத்துவமனை விபரங்கள் தெரிய வரும் என்றனர். சுகாதாரத்துறை ஆய்வாளரிடம் கேட்ட போது, நீங்கள் இங்கு வந்து பிறப்பு, இறப்பு செய்யுங்கள் என்று கூறுகின்றனர். இதனால் எங்களுக்கு அலைச்சல், கால விரயம் ஏற்படுகிறது. பொதுமக்கள் நலன் கருதிகரோனா காலத்தில் சுகாதாரத்துறையினர் தீவிர களப்பணியிலுள்ளனர். மேலும் பொதுமக்களுக்கும் வெளியே செல்ல அச்சமாக உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் பிறப்பு, இறப்பு சான்று பதிவு செய்வதில் பிரச்சனைகளை உடனே நீக்க வேண்டுமென தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory