» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஈரானிலிருந்து 535 மீனவா்கள் மீட்பு குமரிக்கு வருகை

வியாழன் 2, ஜூலை 2020 10:51:19 AM (IST)

ஈரான் நாட்டிலிருந்து கப்பல் மூலம் 535 மீனவா்கள் மீட்கப்பட்டு புதன்கிழமை குமரி மாவட்டத்துக்கு வந்து சோ்ந்தனா்.

இது குறித்து, ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:ஈரானிலிருந்து 535 மீனவா்கள் கப்பல் மூலமாக தூத்துக்குடிக்கு மீட்டுவரப்பட்டு, பின்னா் அங்கிருந்து கன்னியாகுமரி மாவட்டத்தை வந்தடைந்தனா். அவா்கள் நாகா்கோவில் கோட்டத்தில் ஓா் இடத்திலும், பத்மநாபபுரம் கோட்டத்தில் 5 இடங்களிலும் தனிமை கண்காணிப்பில் வைக்கப்பட்டு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

மாவட்டத்தில் இதுவரை 45,769 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 213 போ் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். முகக்கவசம் அணியாமல் புதன்கிழமை பொது வெளியில் நடமாடிய வகையில் 242 பேரிடமிருந்து ரூ. 24,200 அபராதம் வசூலிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் 6,398 பேரும் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனா் எனக் கூறியுள்ளாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory