» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

டாக்டர்கள்,நர்ஸ் ஆகியோர் பணி பாராட்டுக்குரியது : கண்காணிப்பு அலுவலர் பாராட்டு

புதன் 1, ஜூலை 2020 5:51:53 PM (IST)


கன்னியாகுமரி மாவட்டத்திற்கு,கோவிட் -19 கண்காணிப்புஅலுவலராக நியமிக்கப்பட்டுள்ள ஜோதிநிர்மலாசாமி, மாவட்டஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, முன்னிலையில், இன்று (01.07.2020) மாவட்டத்தில்,கொரோனா வைரஸ் தடுப்புபணிகள் குறித்து பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தார்.
 
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு  ஆரல்வாய்மொழி சோதனைசாவடியில்,  வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து, குமரிமாவட்டத்திற்கு வருகைதரும் பொது மக்களுக்கு எடுக்கப்படும் கொரோனாவைரஸ் பரிசோதனைகள் மற்றும் அதன் தொடர் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ததோடு,தானும் வெப்பமாணி மூலம் பரிசோதனைமேற்கொண்டார். சோதனைகள் முடிந்தபின், ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கல்லூரிக்கு அழைத்து சென்று,அங்கு அவர்களுக்கு காய்ச்சல்,சளி, இருமல் உள்ளிட்டகொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவது குறித்து,கேட்டறிந்தார்.

கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் டாக்டர்களையும் ,மருத்துவத்துறையை சார்ந்த செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களை வெகுவாக பாராட்டினார்.மேலும், இப்பணிகளில் ஈடுபட்டுள்ள பிறதுறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் பணிகள் பாராட்டுக்குரியது என தெரிவித்தார்.

நடைபெற்றஆய்வுகூட்டத்தில்,மாவட்டவருவாய் அலுவலர் ரேவதி,நாகர் கோவில் மாநகராட்சிஆணையாளர் ஆஷா அஜித்சார் ஆட்சியர் (பத்மநாபபுரம்) ஷரண்யாஅறி,உதவிகாவல் கண்காணிப்பாளர் ஜவஹர், மாவட்ட ஆட்சியரின் நேர்முகஉதவியாளர்(பொது) வீராசாமி, மாவட்டவருவாய் அலுவலர் (ஒழுங்குநடவடிக்கைகள்,திருநெல்வேலி) .சுகன்யா, துணைஆட்சியர் (பயிற்சி) பிர்தௌஸ் பாத்திமா ,உதவிஆட்சியர்(பயிற்சி) .ரிஷாப், நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory