» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வடமாநில தொழிலாளர்கள் சொந்தஊர் அனுப்பி வைப்பு

செவ்வாய் 26, மே 2020 1:41:22 PM (IST)

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரையில் இருந்து ரயில் மூலம் குமரி மாவட்டத்தில் வசித்த மத்திய பிரதேசம் மாநிலத்தை சார்ந்த 156 பெயரை சொந்த ஊருக்கு அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் வசிக்கும் வடமாநிலத்தவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் மரி மாவட்டத்தில் வசித்த மத்திய பிரதேசம் மாநிலத்தை சார்ந்த 156 பெயரை சொந்த ஊருக்கு அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி நாகர்கோவில் எஸ்எல்பி பள்ளியிலிருந்து 5 அரசு பேருந்துகள் மூலம் நாகர்கோவில் ஆர்டிஓ மயில் வழியனுப்பி வைத்தனர்.

மேலும் பயணம் மேற்கொள்ளும் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் அறிவுறுத்தலின்படி அம்மா உணவகங்கள் மூலம் உணவு தயார் செய்யப்பட்டு 200 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory