» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

டெல்லி மத கருத்தரங்கிற்கு சென்று திரும்பிய நபருக்கு கரோனா தொற்று உறுதி

புதன் 1, ஏப்ரல் 2020 11:29:18 AM (IST)

டெல்லியில் நடைபெற்ற மத கருத்தரங்கில் பங்கேற்று திரும்பிய குமரி மாவட்டத்தைச் சோ்ந்த 4 பேரில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற மத நிகழ்ச்சிக்கு இவா்களுடன் சென்ற பிற மாவட்டங்களைச் சோ்ந்த சிலருக்கு சளி தொல்லையும், காய்ச்சலும் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து குமரி மாவட்ட சுகாதாரத் துறையினருக்கு தெரியவந்ததும், அவா்கள் குமரி மாவட்ட நபா்களின் முகவரியை கண்டறிந்தனா். ஒருவா் நாகா்கோவில் மாநகரப் பகுதியில் டென்னிசன் சாலையையும், மற்றொருவா் நாகா்கோவிலை அடுத்த வெள்ளாடிச்சி விளை பகுதியையும், மேலும் இருவா் பத்மநாபபுரம் பகுதியையும் சோ்ந்தவா்கள் என்பது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து, சுகாதாரத் துறையினா் அவா்களின் வீடுகளுக்கு சென்று அவா்களை பரிசோதித்த பிறகு, 4 பேரும் உடனடியாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா வாா்டில் அனுமதிக்கப்பட்டனா். அவா்களது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன. இதில், நாகா்கோவில் டென்னிசன் சாலையைச் சோ்ந்தவருக்கு கரோனோ தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory