» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பிய தூத்துக்குடி நபர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்!

புதன் 1, ஏப்ரல் 2020 10:41:27 AM (IST)

டெல்லி தப்ளிக் ஜமாத் மாநாட்டுக்கு சென்று வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த ஒருவரின் வீடு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. 

டெல்லியில் சமீபத்தில் தப்ளிக் ஜமாத் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஏராளமானோருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்ததுள்ளது. இந்த மாநாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 18பேர் பங்கேற்று திரும்பியுள்ளனர். இதில், ஒருவர் மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இவர் கடந்த 20ம் தேதி டெல்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளார். பின்னர் 23ம் தேதி தூத்துக்குடி திரும்பியுள்ளார். இந்த விபரம் தெரியவரவே நேற்று நள்ளிரவில் சுகாதாரத் துறையினர் மற்றும் போலீசார் அதிரடியாகச் சென்று அவரது வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டவர்கள் ஸ்டிக்கர் ஒட்டினர். 

இந்நிலையில் தூத்துக்குடியில் இன்று காலை சுகாதாரத்துறை அதிகாரிகள், காவல்துறையினர், மருத்துவர்கள், ஊராட்சி அலுவலர்கள் உள்பட பல அதிகாரிகள் அந்த பகுதியில் ஆய்வு செய்தனர்.  அந்த பகுதியில் கிருமி நாசினி மருந்து தெருக்களில் தெளிக்கப்பட்டது. அந்த பகுதியில் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு பிற நபர்கள் உள்ளே செல்லாதபடி தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது போல் துத்துக்குடி மாவட்டத்தைச் மேலும் 17பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது வருகிறது. இதில் பலரது செல்போன்கள் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால் அவர்களை கண்டறிவதில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. . 


மக்கள் கருத்து

பார்திபன் (தேவகோட்டை)Apr 3, 2020 - 07:25:46 AM | Posted IP 173.2*****

இதேபோல் சிவராத்திரியின் போதும் மக்கள் அதிகளவில் கூடினார்கள் அங்கிருக்கும் மக்களையும் சிறிது சோதனைக்கு உட்ட்டால் அவர்களுடன் பயணிக்கும் நாங்களும் சிறிது அச்சமின்றி வாழலாம்

ஜெயராம்Apr 3, 2020 - 07:20:43 AM | Posted IP 173.2*****

இதேபோல் சிவராத்திரியின் போது சேர்ந்த கூட்டத்தின் மக்களை ஆராய்ந்து அவர்களுக்கும் சோதனையை மேற்கொண்டால் அவர்களுடன் இருக்கும் நாங்கள் அச்சமின்றி வாழ உறுதுணையாக இருக்கும்

publicApr 1, 2020 - 12:33:00 PM | Posted IP 108.1*****

antha area pera potta,pakkathil ulla makkal kooduthal alertah irupparhal

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory