» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஏப்,2 முதல் கொரோனோ நிவாரண உதவி விநியோகம் : குமரி மாவட்ட ஆட்சியர் தகவல்

செவ்வாய் 31, மார்ச் 2020 1:06:17 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நியாயவிலைக்கடைகளில் 02.04.2020 முதல் 15.04.2020 வரை கொரோனோ வைரஸ் நிவாரண உதவி விநியோகம் செய்யப்படும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, தெரிவித்துள்ளார்.

இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்  விடுத்துள்ள செய்திகுறிப்பில், கொரோனா வைரஸ் நிவாரண உதவித்தொகை ரூபாய் 1000 ரொக்கமும் அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட இருப்பதால் அதனைப் பெறும் ஆர்வத்தில் குடும்ப அட்டைதாரர்கள் அதிக எண்ணிக்கையில் நியாய விலைக்கடைகளுக்கு ஒரே நேரத்தில் வருவதை தவிர்க்க ஏதுவாக தெரு வாரியாக உள்ள குடும்ப அட்டையின் எண்ணிக்கையின் அடிப்படையில் டோக்கன்ஃ சுழற்சி முறையில் முற்பகல் 50 நபர்களுக்கும், பிற்பகல் 50 நபர்களுக்கும் வழங்கப்படும். 

குறிப்பிட்டுள்ள நபர்கள் தவிர வேறு யாரும் அந்த நேரங்களில் நியாயவிலைக்கடைக்கு வரக்கூடாது. கொரோனா வைரஸ் உதவித் தொகையினை பெற வரும் குடும்ப அட்டைதாரர்கள் 1 மீட்டர் இடைவெளியில் ஆண்கள் தனியாகவும், பெண்கள் தனியாகவும் வரிசையில் தனிமைப்படுத்தி நின்று வாங்கவும், கொரோனா வைரஸ் நிவாரண உதவித்தொகை பெறுவதற்காக வருகின்ற மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களை வரிசையில் நிற்க வைக்காமல் முன்னுரிமை அளிக்கப்படும்.  

குடும்ப அட்டை இல்லாத இனங்களில் அவர்களுக்கு அக்குடும்ப அட்டையில் உள்ள நபர்களில் ஏதேனும் ஒருவவரின் ஆதார் அட்டையினை வைத்தோ அல்லது பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிற்கு வரும் கடவுச் சொல் அடிப்படையில் கொரோனா வைரஸ் நிவாரண உதவித்தொகை வழங்கப்படும்.  தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு உரிய நிவாரணத்தொகை மற்றும் நியாயவிலைக்கடை மூலம் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள் மட்டும் அவர்களின் வீடுகளுக்கே சென்று நேரில் வழங்கப்படும். மேலும் நெரிசல் ஏற்படும் வண்ணம் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் கூட வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory