» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடி கரோனா வார்டில் ஒரே ஒரு நபர் மட்டுமே உள்ளார் - உறைவிட மருத்துவர்

செவ்வாய் 31, மார்ச் 2020 7:47:12 AM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பிரிவில் ஒரே ஒரு நபர் மட்டுமே உள்ளதாக உறைவிட மருத்துவர் தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெளிமாநிலத்தில் இருந்து தூத்துக்குடிக்கு வந்து 4,677 பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதேபோன்று வெளிநாட்டில் இருந்து வந்த 2,007 பேர் கண்டறியப்பட்டு உள்ளனர். அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். 

இந்நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா சிகிச்சைக்கான தனிப்பிரிவில் ஒரே ஒருவர் மட்டும் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. "கரோனா வார்டில் சிகிச்சை பெற்ற மற்ற 7 பேர் ரிப்போர்ட் நல்ல முறையில் வந்ததால் சாதாரண வார்டுகளுக்கு மாற்றப் பட்டார்கள் என்ற செய்தியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து

tuticorianMar 31, 2020 - 08:44:12 AM | Posted IP 173.2*****

real happy news for tuticorin

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory