» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு : பொதுமக்களுக்கு தளவாய்சுந்தரம் வேண்டுகாேள்
திங்கள் 30, மார்ச் 2020 6:41:34 PM (IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள், மீனவர்கள், விவசாயிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம்வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து, இன்று (30.03.2020) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோயை தடுக்க தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்கள் நலனை மையமாகக் கொண்டு அரசு, கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையையும், பல்வேறு வகைகளில் விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, இந்நோயிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள அரசு அறிவித்துள்ளப்படி, வெளியில் வராமல் தங்கள் வீடுகளில் இருக்க வேண்டும். இதன்மூலம், இந்நோய் வராமல் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள முடியும். இதில் அக்கறை செலுத்தாமல், இந்நோய் நம்மை தாக்காது, என அலட்சியம் செய்யாதீர்கள். மக்கள் நலனுக்காகவே, இந்த அரசு முழு மூச்சாக செயல்பட்டு வருகிறது. அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். பொதுமக்கள், விவசாயிகள், மீனவ சமுதாய மக்கள் இதனை உணர்ந்து விழிப்புடன் செயல்பட வேண்டும்.
இளைஞர் சமுதாயம் நம் நாட்டின் எதிர்காலம். இதனை உணர்ந்து இளைஞர்கள் வெளியில் செல்லாமல் வீட்டில் இருக்க வேண்டும். மேலும், விளையாட்டு மைதானங்களுக்கு சென்று, விளையாடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும், கடற்கரை பகுதிகளுக்கு சென்று பொழுதை களிக்காமல், இந்த நாட்டின், வீட்டின் நலன் கருதி தங்கள் வீடுகளில் இருக்க வேண்டும். இதுவே பாதுகாப்பாக இருக்கும். மேலும், மீன் வாங்க செல்பவர்கள் கூட்டம் கூட்டமாக செல்லாமல் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். மேலும், தோவாளை, அகஸ்தீஸ்வரம் தாலுகாக்களில்; விவசாய விளைபொருள் உற்பத்தியாளர்கள் விற்பனை கூட்டுறவு சங்கத்தின் மூலம் நடமாடும் காய்கறி விற்பனை நிலையம் வீடு வீடாக சென்று, குறைந்த விலையில் காய்கறிகளை விற்பனை செய்து வருகிறது. இந்த நோயின் தாக்கத்தை உணர்ந்து, அதற்கேற்ப அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். என தளவாய் சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இளம்பெண்ணை காதலிப்பதாக ஏமாற்றி ஆபாச படம் : காசி மீது 3வது குற்றப்பத்திரிகை!
செவ்வாய் 26, ஜனவரி 2021 8:50:25 AM (IST)

பொதுமக்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும்: ஆட்சியா்
செவ்வாய் 26, ஜனவரி 2021 8:48:11 AM (IST)

பிரதமர் மோடியின் சகோதரர் கன்னியாகுமரி வருகை : விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டார்
திங்கள் 25, ஜனவரி 2021 10:33:24 AM (IST)

வாக்காளர் தின விழிப்புணர்வு சைக்கிள் பேரணி: ஆட்சியர், ஆணையர் பங்கேற்பு
சனி 23, ஜனவரி 2021 3:55:00 PM (IST)

திருமண புரோக்கரை காரில் கடத்தி 23 பவுன் நகை பறிப்பு : மர்மநபர்களுக்கு வலைவீச்சு
சனி 23, ஜனவரி 2021 8:51:47 AM (IST)

திமுக ஆட்சியில் விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்: கனிமொழி
வெள்ளி 22, ஜனவரி 2021 10:40:33 AM (IST)
