» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கரோனா தாக்கம் தணிய ராமநாமம் உச்சரியுங்கள் : இந்து முன்னணி வலியுறுத்தல்

திங்கள் 30, மார்ச் 2020 6:27:30 PM (IST)

கரோனா வைரஸ் தாக்கம் தணிய வரும் வியாழக்கிழமை  (ஏப். 2ஆம்தேதி) மாலை வீடுகளில் ஸ்ரீராம நாமம்  உச்சரித்து  சிறப்பு வேண்டுதல் நடத்திட வேண்டும் என மாவட்ட இந்து முன்னணி பொதுச் செயலர்  சக்திவேலன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, இந்துக்கள் அனைவரும்  தங்களது குடும்ப நலன், அவர்களது உறவினர்கள் நலன் கருதி நாட்டு நன்மைக்காகவும் கரோனா வைரஸில் இருந்து விடுபடுவதற்கும் வரும் வியாழக்கிழமை (ஏப். 2ஆம் தேதி)  மாலை 6 மணி அளவில் அவர்களுடைய  வீட்டின் முன்பு மஞ்சள் நீர், வேப்பிலை, பசுமாட்டு சாணம் கலந்த நீரை தெளித்து அதன் மேல் கோலமிட்டு அதில் மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வைத்து மண்சட்டியில் வேப்ப எண்ணெய்  தீபம் ஏற்றி ஸ்ரீராமநாமம் 108 முறை நாமம் குடும்பத்துடன்  உச்சரிக்க  வேண்டும்.

அவ்வாறு செய்தால் தீராத வினையும் தீரும். கரோனா வைரஸிலிருந்து நாம் வெற்றிபெறலாம்.  இதனை தங்களது  உறவினர்கள், நண்பர்களுக்கு தொலைபேசி மூலமாக தகவல் தெரிவித்து குறைந்தபட்சம் 100 பேர் இந்த ஸ்ரீராம நாமத்தை உச்சரிக்க வைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

பாலாApr 1, 2020 - 06:07:57 PM | Posted IP 162.1*****

நல்ல வேலை மாட்டு மூத்திரம் ஏதும் குடிக்க சொல்லல....

முத்துMar 31, 2020 - 04:44:02 PM | Posted IP 108.1*****

ஜெய் ஶ்ரீராம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory