» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கொரோனா தடுப்புக்காக தீவிர சிகிச்சைபிரிவு : கன்னியாகுமரி ஆட்சியர் ஆய்வு

சனி 28, மார்ச் 2020 11:39:57 AM (IST)கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டு வரும் கொரோனா காய்ச்சல் தடுப்பு சிகிச்சைக்காக, தனிஅறைகள், தீவிர சிகிச்சைபிரிவு மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் பிரிவு ஆகியவை அமைக்கப்பட்டு வருவதை,மாவட்டஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, தனியார் மருத்துவமனை நிர்வாகிகளுடன் நேரில் சந்தித்து இன்று (27.03.2020)ஆலோசனை நடத்தினார்.

கன்னியாகுமரிமாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முன்னிட்டு,குலசேகரம் மூகாம்பிகை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஏற்படுத்தப்படவுள்ள தனி அறைகள் ,தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட அறை ஆகியவை குறித்து, மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி,சார் ஆட்சியர் (பத்மநாபபுரம்) சரண்யாஅறி, ,ஆகியோர் முன்னிலையில்,கல்லூரி முதல்வர் மரு.பத்மகுமார், மருத்துவ கல்லூரி கொரோனா தொற்றுநோய் தடுப்பு ஒருங்கிணைப்பாளர் மூகாம்பிகா, நிர்வாக இயக்குநர் வினுகோபிநாத்,நிர்வாகஅலுவலர்பிரசாத் ஆகியோருடன் ஆலோசனைசெய்தார். 

தொடர்ந்து,மார்த்தாண்டம் பி.பி.கே. கிட்னிகேர் சென்டர் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பு சிகிச்சைக்காக ஏற்படுத்தப்படவுள்ள தனிஅறை மற்றும் தீவிர சிகிச்சைபிரிவு குறித்து மருத்துவமனை நிர்வாக இயக்குநர் மரு.ரஞ்சித்குமார் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.அதனைத் தொடர்ந்து, நெய்யூர் சி.எஸ்.ஐ மிஷன் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பு சிகிச்சைக்காக ஏற்படுத்தப்படவுள்ள தனிஅறை மற்றும் தீவிர சிகிச்சைபிரிவு ஆகியவை குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.ராஜேஷ்சத்தியா மற்றும் மருத்துவமனை மருத்துவஅலுவலர் ஆகியோருடன் ஆலோசனைநடத்தினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory