» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வண்ணாரப்பேட்டை தடியடியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சனி 15, பிப்ரவரி 2020 7:34:55 PM (IST)சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற தடியடியை கண்டித்து நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, சென்னை வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் வெள்ளிக்கிழமை இரவு போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதாகவும், இதில் வண்ணாரப்பேட்டை காவல் இணை ஆணையர் விஜயகுமாரி படுகாயம் அடைந்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர். 

இதை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தை கண்டித்து நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory