» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கப்பலில் வேலை வாங்கி தருவதாக ரூ.13¼ லட்சம் மோசடி : 3 பேருக்கு வலை

வியாழன் 21, நவம்பர் 2019 12:59:23 PM (IST)

தக்கலை அருகே கப்பலில் வேலை வாங்கி தருவதாக கூறி கொத்தனாரிடம் ரூ.13¼ லட்சம் மோசடி செய்ததாக தம்பதி உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

குமரி மாவட்டம் தக்கலை அருகே வசித்து வருபவர் ஜேம்ஸ்(44), கொத்தனார். இவருடைய மனைவி ஜான்சி ராணி(40). ஜேம்ஸ் கடந்த 2 ஆண்டுக்கு முன் அரபு நாட்டில் கொத்தனாராக வேலை செய்து வந்தார்.ஜேம்ஸ் வீட்டின் அருகில் கண்ணாட்டுவிளையை சேர்ந்த ராமன்(75), இவருடைய மகன் அய்யப்பன்(35), மனைவி அமுதா (33) ஆகியோர் வசித்து வந்தனர். அமுதாவின் குடும்பத்தினர் ஜான்சி ராணியிடம் பழகி வந்தனர்.
 
அப்போது அமுதா, தனது குடும்பத்தினர் பலரை கப்பல் வேலைக்கு வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், ஜேம்சுக்கும் ரூ.2 லட்சத்தில் வெளிநாட்டில் கப்பலில் வேலை வாங்கி தருவதாகவும் கூறினார். இதை உண்மை என நம்பிய ஜான்சி ராணி அதற்கு சம்மதித்தார். அதைத்தொடர்ந்து ஜான்சி ராணி கணவரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதற்காக ரூ.13 லட்சத்து 34 ஆயிரத்தை பல தவணைகளாக அமுதாவின் குடும்பத்தினரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் ஜேம்ஸ், விடுமுறையில் ஊர் திரும்பினார். அதன்பிறகு பல மாதங்களாகியும் அமுதாவின் குடும்பத்தினர் ஜேம்சை வெளிநாட்டுக்கு அனுப்பவில்லையாம். இதனால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஜேம்ஸ், அமுதா குடும்பத்தினரிடம் பணத்தை திருப்பிக்கேட்டார். அவர்களும் பணத்தை திருப்பி தருவதாக கூறினார்கள்.இந்த நிலையில் சம்பவத்தன்று ஜேம்ஸ், அமுதாவின் வீட்டுக்கு சென்றார். அங்கு வீடு பூட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அமுதா அவருடைய கணவர் அய்யப்பன் உள்பட 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory